திங்கள், 21 அக்டோபர், 2019

திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மலேசியா விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்

திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்தினத்தந்தி : திருச்சியில் இருந்து மலேசியா செல்லவிருந்த விமானத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டது. திருச்சி, பூமியின் தரைமட்டத்தில் இருந்து அதிக உயரத்திற்கு நாம் செல்லும் போது வளிமண்டலத்தில் உள்ள காற்றின் அழுத்தம் குறைந்து விடும். இதனால் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை நமது நுரையீரலால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். விமானங்கள் அதிக உயரத்தில் பறந்து செல்லும் போது இந்த பிரச்சினையை சமாளிக்க, விமானங்களில் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனின் அழுத்தத்தை நமக்கு தேவையான அளவு வரை கட்டுப்படுத்தி உள்ளே செலுத்தும் அமைப்புகள் இருக்கும்.

நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த விமானம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் ஏறிய பயணிகள் மூச்சு திணறுவதாக விமான ஊழியர்களிடம் புகார் கூறியதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஆக்ஸிஜன் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகளில் கோளாறு ஏற்பட்டதால், விமானத்திற்குள் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. விமான ஊழியர்கள் சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டதால் 120 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக