வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை ரத்து

ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை ரத்து தினத்தந்தி :  ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று (வியாழக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.  அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 சட்டத்தின் படி அம்மாநிலத்தின் லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறுசீரமைப்பு சட்டம் விதி 54-ன் படி, ஜம்மு-காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை கலைப்பதற்கான உத்தரவை பொது நிர்வாகத்துறை  வெளியிட்டுள்ளது.

அதன்படி, சட்ட மேலவையில் பணியாற்றிவந்த 116 ஊழியர்களும் வரும் 22-ம் தேதியில் இருந்து தங்கள் வருகையை பொது நிர்வாகத் துறையிடம் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஜம்மு-காஷ்மீர் மேலவை செயலாளர் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் சட்ட மேலவை கட்டிடம், பர்னிச்சர், மற்றும் மின் சாதனங்களை எஸ்டேட்ஸ் இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

ஜம்மு-காஷ்மீர் மேலவை செயலாளர் தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு, வணிகம், சட்டசபை விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சட்டசபை செயலகத்திடம் ஒப்படைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக