வெள்ளி, 18 அக்டோபர், 2019

பாஜகா பாசிசத்தின் எதிர்ப்பு குறியீடு.... ப.சிதம்பரம்


ப.சிதம்பரம் .. மீது பலருக்கும் நியாயமான விமர்சனங்கள் உண்டு .. கோபங்கள் கூட உண்டு. அவற்றில் நியாங்கள் கூட உண்டு .
ஆனால் .... இன்றய காலக்கட்டத்தில் ஒரு மோசமான பாசிசத்தின் எதிர்ப்பு குறியீடாக காலம் அவரை நகர்த்தி விட்டது.
இந்திய பொருளாதாரத்துக்கு திரு.சிதம்பரத்தின் பங்களிப்பு இலகுவில் கடந்து போய்விட கூடிய ஒன்றல்ல .
பிரதமர் நாற்காலியை தொட்டு விடும் தூரத்தில் இருந்தவர் .. அந்த அளவுக்கு தகுதி நிறைந்தவர்.
இன்று அவருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுககள் உள்நோக்கம் கொண்டவை என்பது முழு உலகமும் அறிந்த உண்மை ..
சிதம்பரத்தின் மீதான அரசின் தாக்குதலுக்கு அவரது கட்சியே நியாயமான எதிர்ப்பை காட்ட முடியாத அளவு பலவீனப்பட்டு உள்ளது .
எந்த எதிர்கட்சியும் இந்த விடயத்தில் மத்திய அரசுக்கு தொல்லை கொடுக்கும் அளவுக்கு கடுமையாக எதிர்க்கவில்லை..
இது ஒரு மோசமான நிலை.
சிதம்பரத்தின் நிலை இன்னும் மோசமானால்கூட ஒன்றும் பிரச்சனை இல்லை என்ற நம்பிக்கை அமித்ஷா மோடி கும்பலுக்கு வரலாம் ..
முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம். அவரது வயது மூப்பு .
சிதம்பரத்தின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ...
இனி எவரையும் எதுவும் செய்யலாம் என்ற நம்பிக்கையை அயோக்கிய ஆட்சியாளர்கள் பெற்று விடுவார்கள் ...
அந்த நிலையை நோக்கி ஏற்கனவே நெருங்கி விட்டார்கள் .
இது ஒரு முடிவின் ஆர்ம்பமாக்த்தான் தெரிகிறது !
சிதம்பரத்தை காப்பாற்ற ஜனநாயக சக்திகளால் முடியாவிட்டால் ... ..
அடுத்தது நீங்களாகவே கூட இருக்கலாம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக