வியாழன், 24 அக்டோபர், 2019

மகாராஷ்டிரா . ஹரியானா தேர்தல் முடிவுகள் ... ஒரே பார்வையில் ..

மகராஷ்டிரா  மொத்த தொகுதிகள் 288
                               :பாஜக            156 தொகுதிகளில் வெற்றி !
                             காங்கிரஸ்  106 தொகுதிகளில்  வெற்றி
                      ஏனையவை      26 தொகுதிகளில்   வெற்றி !

ஹரியானா  மொத்த தொகுதிகள்  90 :
                               பாஜக    :       40       தொகுதிகளில்   வெற்றி   !
                               காங்கிரஸ் :30     தொகுதிகளில் வெற்றி !
                           ஏனையவை  :220   தொகுதிகளில்  வெற்றி  !
ஹரியானா   :
BBC : இன்று (வியாழக்கிழமை) நடந்துவரும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பகல் 2 மணி நிலவரப்படி பாஜக- சிவசேனா கூட்டணி 162 இடங்களிலும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் பலவற்றிலும் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போதைய முன்னணி நிலவரங்களின்படி 160 முதல் 170 இடங்கள் வரை மட்டுமே இந்த கூட்டணி வெல்லும் வாய்ப்புகள் உள்ளது.
தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பல முன்னணி தலைவர்கள் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். சிலர் தங்களை சிவசேனாவிலும் இணைத்துக் கொண்டனர்.

    இதனால் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அரசியல் பார்வையாளர்கள் பலர் கூறினர். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறப்பட்ட நிலையில், அக்கட்சி 54 தொகுதிகள் வரை முன்னிலை பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
    >மீண்டும் ஆட்சியமைக்கப் போவது பாஜக கூட்டணியாக இருந்தாலும், காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்த்ததை கூடுதல் இடங்களில் வென்றது குறித்தும், குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்தும் மும்பையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் பிபிசி தமிழிடம் உரையாடினர்.
    ''பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது. ஆனால் நிச்சயம் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையவில்லை. அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே உள்ளது'' என்று மும்பை பத்திரிகையாளர் கதிர் கூறினார்.
    ''நிச்சயம் 230 இடங்களுக்கு மேலாக வென்றுவிடுவோம் என்று கூறிக்கொண்டிருந்த பாஜக கூட்டணிக்கு இது ஒருவகையில் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்''
    ''அதேவேளையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் இறுதிக்கட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தினர். பல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறிய போதிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு என இருக்கும் நிலையான வாக்காளர்கள் அக்கட்சியை இந்த முறையும் கைவிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
    ''பாராமதி, சத்தாரா போன்ற தங்களுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது'' என்று கதிர் மேலும் கூறினார்.
    ''அடுத்து வரும் தேர்தல்களில் நிச்சயம் இந்த வெற்றி அக்கட்சிக்கு பெரும் ஊக்குவிப்பாக இருக்கும். பாஜக வெற்றியை தக்கவைத்திருக்கலாம் . ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி சாதித்துள்ளது.''' என்றார்.
    >பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளின் தேர்தல் பங்களிப்பு குறித்து மும்பை பத்திரிகையாளர் செல்வராஜ் பிபிசி தமிழிடம் பேசினார்.
    ''சரத் பவார் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது கடும் மழையின் நடுவே சரத் பவார் பிரசாரம் செய்தது வாக்காளர்கள் பலரை ஈர்த்துள்ளது என்றே கூறவேண்டும்'' என்று தெரிவித்தார்.
    ''பாஜக- சிவசேனா கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்ததால் தங்களின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தனர். இரு கட்சிகளுக்கும் வாக்காளர்களை ஈர்க்கும் பல தலைவர்கள் உள்ளனர். இது இக்கட்சிகளுக்கு ஆதாயமளித்தது'' என்றார்.
    ''அதேவேளையில் பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினாலும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கப்பவர்களுக்கு சரத் பவார் மற்றும் அவர் குடும்பம்தான் கட்சி. அதனால் அக்கட்சி தனது வழக்கமான தொகுதிகளையும், வாக்குகளையும் தக்கவைத்துக் கொண்டது'' என்று அவர் மேலும் கூறினார்.
    ''இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பலவீனம் அக்கட்சிக்கு வலுவான தலைவர்கள் இல்லாததுதான். அதனால்தான் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி உள்ளது'' என்று குறிப்பிட்டார்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக