புதன், 9 அக்டோபர், 2019

ஸ்டாலின் : சீன அதிபரே வருக..! தேசம் வேறுவேறானாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே..

அதிக மக்கள்   tamil.oneindia.com : எப்போதும் இதுபோல ஆக்கபூர்வமாக செயல்படுங்கள்.. ஸ்டாலினை பாராட்டிய பாஜக.. என்ன நடக்குது!? > எப்போதும் இதுபோல ஆக்கபூர்வமாக செயல்படுங்கள்.. ஸ்டாலினை பாராட்டிய பாஜக-வீடியோ
சென்னை: எப்போதும் இதுபோல ஆக்கபூர்வமாக செயல்படுங்கள் என்று டிவிட் செய்து தமிழக பாஜக திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டி உள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது.
இந்த விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஸ்டாலின் இதில் கலந்து கொள்வது இன்னும் உறுதியாகவில்லை.






என்ன இல்லை

இந்த விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்று சந்தேகம் நிலவி வந்த நிலையில் தற்போது இது தொடர்பாக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகம் வரும் செஞ்சீன அதிபர் மேதகு ஜி ஜின்பிங் அவர்களை 'வருக, வருக' என மனமார வரவேற்கிறோம். இந்தியத் திருநாட்டைப் போலவே, மிகப் பண்டைய பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டது சீனா.




அதிக மக்கள்

மிக நீண்ட நிலப் பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீன தேசத்தின் மேன்மைமிகு அதிபர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜி ஜின்பிங் அவர்கள் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன், என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிலையில் இந்த விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வார். அதற்கான கிரீன் சிக்னல்தான் இந்த அறிக்கை. அவர் கண்டிப்பாக விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக