வியாழன், 24 அக்டோபர், 2019

இந்திய பயணிகள் விமானத்தை ஆபத்துக்கு உள்ளாக்கி அரசியல் ... பாஜகவின் தேசத்துரோக சதி?


JP Terry : உரக்க சொல்லப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட​ செய்தி:
மஹராஷ்டிரா, ஹரியானா தேர்தல் வாக்குபதிவுக்கு சில​ தினங்களுக்கு முன், பாகிஸ்தான் பகுதியில் பறக்கும் இந்திய​ பயணிகள் விமானத்திற்கு "பயணிகள் விமான கோடு" கொடுக்காமல் "இராணுவ​ விமான கோடு" கொடுத்து இந்தியா பறக்கவிடுகிறது.
இராணுவ​ கோடு கொண்ட​ இந்திய விமானம் தன் பகுதியில் பறப்பதை பாகிஸ்தான் அறிந்து கொள்கிறது. அன்று பாகிஸ்தான் அவசரப்பட்டு இராணுவ​ விமானம் என நினைத்து இந்திய​ பயணிகள் விமானத்தை தாக்கியிருந்தால்,
இந்திய​ விமானமும் அதில் பயணம் செய்த​ பயணிகளும் நடுவானிலேயே எரிந்து சாம்பல் ஆகியிருந்திருப்பார்கள். அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் அதனை வைத்து இந்தியாவில் யார் ஆதாயம் அடைந்திருப்பார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் பாகிஸ்தான் அவசரம் காட்டாமல் பொறுப்பாக​ செயல்படுகிறது. அது உண்மையிலேயே இராணுவ​ விமானம் தானா என்பதை உறுதி செய்ய​ முடிவெடுக்கிறார்கள்.
இறுதியில் அது இந்திய​ பயணிகள் விமானம் என அறிந்து அந்த​ விமானத்திற்கு பாதுகாப்பு கொடுத்து பயணிகளை பாகிஸ்தான் காப்பாற்றியது.

பாகிஸ்தானின் இந்த​ பாராட்டுக்குரிய​ செயலை இந்திய​ ஊடகங்கள் எதுவும் பாராட்டாமல் அதனை அப்படியே இருட்டடிப்பு செய்து விட்டது.
ஒருவேளை பாகிஸ்தான் அவசரப்பட்டிருந்தால் இன்று இதே ஊடகங்கள் "பாகிஸ்தானின் வெறிச்செயலை பார்" என்று கூவி மக்களை வெறியேற்றிருக்கும்.
இந்திய​ பயணிகள் விமானத்திற்கு இராணுவ​ விமான கோடு கொடுத்து அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்த​ வேண்டும் என்ற​ நோக்கத்தில் இந்தியாவில் இருப்பவர்கள் செய்த​ சதியை குறித்து ஊடகங்களுக்கும் அக்கறை இல்லை, மக்களுக்கும் அக்கறை இல்லை. பாகிஸ்தானை காட்டி வெறியேற்றி செய்யப்படும் இந்திய​ அரசியல் இறுதியில் இந்தியாவையே நாசம் செய்யப்போகுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக