வியாழன், 10 அக்டோபர், 2019

சட்டக்கல்லூரி ரவுடி மாணவன் கார்த்திக் புதிய மாணவனை அருவாளால் துரத்தி துரத்தி .. வீடியோ ... வணக்கம் வைக்கல்லியாம் ..பல்லாவரம்


tamil.oneindia.com - hemavandhana : பல்லாவரத்தில் பயங்கரம்.. பட்டாக் கத்தியுடன் சட்ட மாணவர்கள் மோதல்.. ஒருவர் படுகாயம்!-சென்னை: வணக்கம் வெக்கலையாம்.. இதுதான் பிரச்சனை.. அதனால் காலேஜ் கேட் வாசலிலேயே நிற்க வைத்து, மாணவனை அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார் சட்டம் படிக்கும் சக மாணவன்!
ரூட் தல விவகாரத்தில் போலீசார் செய்த கெடுபிடியால் இப்போதுதான் மாணவர்கள் அடங்கி உள்ளதாக நினைத்தால், திரும்பவும் ஆரம்பித்து விட்டார்கள்.
கல்லூரி மாணவர்கள் பஸ் தவிர, ரயில்களிலும் காலேஜிக்கு வந்து போவார்கள். அப்படி வரும்போது, கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடனே ரயிலில் பயணம் செய்வார்கள்.
அந்த சமயங்களில் ஆயுதங்களை தரையில் தேய்த்து சத்தம் எழுப்பியும், கூச்சலிட்டும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருப்பர். இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகியதுடன், போலீசாரும் இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.

இப்போது மீண்டும் பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டுள்ளனர். பல்லாவரம் கல்லூரி மாணவர்கள் இடையே இந்த சண்டை எழுந்துள்ளது. இவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் ஆவர். இங்கு கார்த்திக் என்ற மாணவர் 5-ம் வருடம் படித்து வருகிறார்.
அதேபோல, அஸ்வின் என்ற மாணவர், வேறு ஒரு கல்லூரியில் படித்துவிட்டு, இந்த கல்லூரியில் 5-ம் வருடம் புதிதாக வந்து சேர்ந்துள்ளார். இங்கு கார்த்திக் சீனியர் என்பதால் ரவுடி போலவே வலம் வந்துள்ளார். கார்த்திக்கை எந்த மாணவர்கள் பார்த்தாலும் பயந்து நடுங்குவார்களாம்.. எல்லாரும் கார்த்திக்கு மரியாதை தந்துதான் ஆகணுமாம்.
ஆனால் அஸ்வின் கார்த்திக்குக்கு மரியாதை தரவில்லை என்று தெரிகிறது. கார்த்திக்கை பார்க்கும்போது, அஸ்வின் வணக்கம் வைப்பது இல்லையாம். இதுதான் கார்த்திக்கின் ஆத்திரம்! இன்று காலேஜ் கேட் வாசலில் கார்த்திக் நின்று கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த அஷ்வின், வழக்கம்போல் கார்த்திக்கை பார்த்ததும் வணக்கம் வெக்காமல் அவரை கடந்து சென்றுள்ளார். ஏற்கனவே செம கடுப்பில் இருந்த கார்த்திக், அஸ்வின் தன்னை பார்த்தும் கண்டுக்காமல் செல்லவும், அங்கேயே கேட்டில் நிற்க வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் அஸ்வினுக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, அவரைஉடனடியாக கிரீம்ஸ் ரோடில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மாணவர்களிடையே இப்படி ஒரு மோதல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். காலேஜ் வாசலில் கார்த்திக், அஸ்வினை அரிவாளால் வெட்டிய வீடியோ வெளியாகி உள்ளது. இதை கண்டதும், மக்கள் மேலும் பீதியிலும், கலக்கத்திலும் உறைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக