வெள்ளி, 4 அக்டோபர், 2019

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் RSS அங்கத்துவன் ... உத்தர பிரேதேசதில் பயிற்சி பெற்றவன்

 திருச்சி நகை கடையில் கொள்ளையடித்த நகை கொள்ளையன் சிக்கினான்  தினத்தந்தி :  திருச்சி லலிதா ஜூவல்லரி நகை
கடையில் கொள்ளையடித்த நகை கொள்ளையன் வாகன தணிக்கையின் போது சிக்கினான். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
நேற்று முன் தினம் அதிகாலை 2 மணி அளவில் கடைச்சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர். பிரபல நகைக்கடையில் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், திருவாருரில் வாகன தணிக்கையின் போது, நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. நகைகளில் இருந்த பார்கோடுகள் மூலம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகள் தான் அவை என்பது தெரியவந்தது. தப்பியோடிய சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக