வெள்ளி, 4 அக்டோபர், 2019

ஓடிஸா 6 தாத்தாக்களின் பல்லை பிடுங்கி மலம் உண்ணசெய்த .. சூனியமாம் - 6 பெண்கள் திடீர் திடீர் மரணம்


Six elderly men were tortured and forced to consume human excreta over suspicions of witchcraft in Odisha's Ganjam district,
22 women arrested for pull out teeth of 6 men near Odisha tamiloneindia.com : பெர்‌ஷம்பூர்: திடீர் திடீர் என பெண்கள் மரணம் அடைந்துவிட்டனர்.. இது சம்பந்தமாக ஊர் மக்களுக்கு 6 தாத்தாக்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களின் பற்களை கொடூரமாக பிடுங்கி எறிந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் கோபாபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் போன 6 மாசத்தில் மட்டும் 3 பெண்கள் மர்மமான முறையில் இறந்துவிட்டனர். மேலும் 7 பேர் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டனர்.
திடீர் திடீர் என உயிரிழப்பு சம்பவங்கள் நடந்ததால், ஒட்டுமொத்த கிராமத்துக்கும் யாரோ சூனியம் வெச்சிட்டாங்க என்று ஊர் மக்கள் நினைத்தனர். இப்படி நினைத்ததுடன் மட்டும் இல்லாமல், அந்த கிராமத்தில் இருந்த 60 வயது தாத்தாக்கள் 6 பேர் மீது சந்தேகமும் வந்தது. அவர்கள்தான் ஏதோ மாய, மந்திரம் செய்து, இப்படி பெண்களை பலி வாங்கி விட்டதாக நினைத்தனர்.

இதற்காக ஒரு கூட்டத்தையும் ஊர் மக்கள் கூட்டினர். சந்தேகப்பட்ட 6 தாத்தாக்களின் பற்களையும் பிடுங்கிவிடலாம் என முடிவு செய்தனர். அதன்படி அந்த ஊர் மக்கள் குறிப்பாக பெண்கள், 6 தாத்தாக்களின் வீடுகளுக்கும் சென்று, அவர்களின் வயதைகூட கணக்கில் எடுத்து கொள்ளாமல், வெளியே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.

பின்னர், அவர்களை கெட்டியாக பிடித்து கொண்டு, கற்களை வைத்து அவர்களின் வாயில் உள்ள பற்களை உடைக்க ஆரம்பித்தனர். சில பெண்கள், வீட்டு கிச்சனில் இருந்து இடுக்கிகளை கொண்டு வந்து, அதன்மூலம் பற்களை பிடுங்கினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக