செவ்வாய், 1 அக்டோபர், 2019

கமலஹாசன் ஞானவேல் ராஜாவின் பத்து கோடியை ஏப்பம் விட்ட கதை!

சாவித்திரி கண்ணன் : ஒரு வாக்கு,ஒரு சொல் இதில் உறுதியாக
நிற்பவனைத் தான் உலகம் பெரிய மனிதன் என்று கைகூப்பித் தொழும்!
உத்தம வில்லன் படத்திற்கு எத்தனை தடைகள்...!
கமஹாசனின் கடந்த காலப் படங்களால் கடும் பாதிப்பு அடைந்தவர்கள் ஒரு புறம் பணம் செட்டில் பண்ணச் சொல்லி நிர்பந்தம் தந்தனர்.
’’ DTH ல் ரிலீஸ் செய்வேன்’’ என கமல் கூற,வினியோகஸ்தர்கள்,தியேட்டர் உரிமையாளர்கள் போர்க் கொடி தூக்கினர். தாயரிப்பாளர் சங்கத்தில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன!
’கமலை வைத்து படமெடுக்க விரும்பியது தவறான முடிவோ...’ என லிங்குசாமி கலங்கி துடித்த நேரம்!
’’பணம் கொடுத்து உதவ யாராவது முன் வந்தால் நான் அவர்களுக்கு அடுத்த படம் பண்ணித் தருகிறேன்..” என கமல் சொல்லவும் , லிங்குசாமிக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
இதை ஞானவேல் ராஜாவிடம் கூற, அவர், ’’கமல் ஒரு மகத்தான கலைஞன், நீங்களும் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்திட்டீங்க.., இந்த நேரத்தில இப்படி பல தடைகள்! எனக்கும் கமலை வைத்து படமெடுக்க ஆசை! அவருகிட்ட கேளுங்க அவர் எனக்கு படம் பண்ணித் தருவாரா? அப்படியானால் நான் பத்து லட்சம் தருகிறேன்..’’ என ஞானவேல் ராஜ கேட்க, லிங்குசாமி கமலுக்கு தகவல் சொன்னார்.

அதன் பிறகு கமலே ஞானவேலை தொடர்பு கொண்டு
நன்றி கூறிப் பேச, அடுத்த படம் ஞானவேலுக்கு பண்ணித் தர முதல் காப்பி அடிப்படையில் 40 கோடி கமலுக்கு தர வேண்டும் என முடிவாகி அதில் இந்த 10 கோடி அட்வான்ஸ் என முடிவானது!
இது தான் சினிமா துறையில் நான் விசாரித்த வகையில் நடந்த விவகாரம்! இது நடந்தது 2014.
இப்படி ஒரு சொல்,ஒரு வாக்கு இந்த அடிப்படையில் நிறைய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
தாயாரிப்பாளர்கள் நாகி ரெட்டி, சின்னப்ப தேவர், சிவாஜி, எம்ஜிஆர் என கடந்தகால பெரிய ஆளுமைகள் வாழ்வில் இதற்கு பல உதாரணங்கள் உண்டு!
கமலஹாசனையும் அத் தகு பெரிய மனிதர்களில் ஒருவராக நினைத்தது தான் ஞானவேல் ராஜா செய்த தவறோ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக