வியாழன், 3 அக்டோபர், 2019

லலிதா ஜுவல்லரி .. ஒரு ஸ்குரு டிரைவர்- மொத்த நகைகளையும் அள்ளிய.... புதிய வீடியோ

   மாலைமலர் :திருச்சியில் பிரபல நகைக்கடையில் ஒரே ஒரு ஸ்குரு டிரைவரை கொண்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்த வீடியோ
தற்போது வெளியாகியுள்ளது. திருச்சி:< திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு, முகமூடிகள் அணிந்து உள்ளே நழைந்த கொள்ளையர்கள், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் நேரிடையாக விசாரணையில் இறங்கியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதில் கொள்ளையர்கள் பெரிய ஆயுதங்கள் எதுவுமின்றி ஒரே ஒரு ஸ்குரு டிரைவை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடையின் கீழ்த்தளத்தில் போட்ட ஓட்டை வழியாக உள்ளே நுழையும் கொள்ளையர்கள் கீழ்த்தளத்தில் உள்ள நகைகளை தான் முதலில் கொள்ளையடிக்கின்றனர். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகை பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைத்து நகைகளை தனியாக எடுத்துக்கொள்கிறார்கள். அதே போல் கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மொத்த நகைகளையும் அள்ளுகிறார்கள்.

திருடிய நகைகளை எடுத்து பக்கத்தில் வைத்திருக்கும் கருப்பு பைக்குள் ஒருவர் திணிக்கிறார். இன்னொருவரும் அதற்கு உதவுகிறார். இந்த கருப்பு பையில் ஒரு கயிறு கட்டப்பட்டுள்ளது. நகைகள் கொள்ளையடித்துவிட்டு, இந்த கயிறு மூலம்தான் நகைகளை இழுத்து சென்றுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக