செவ்வாய், 1 அக்டோபர், 2019

சஜித் பிரேமதாசாவின் வரவினால் கோட்டாபாயா ராஜபக்சவுக்கு தோல்வி? - ராவய விக்டர் ஐவன்

Jeevan Prasad : சஜித் வரவினால் கோட்டாவுக்கு தோல்வி ? -
கோத்தபாயா - அனுரகுமாரா - சஜித்பிரேமதாசா
ராவய விக்டர் ஐவன்:     இனி வரும் ஜனாதபதிக்கு இப்போதுள்ள அதிகாரம் கூட இல்லை. பெயரளவில் ஒரு ஜனாதிபதி மட்டுமே. அதை இன்னும் யாரும் விளங்கிக் கொள்ளவில்லை. அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்துக்கு இயற்கையாகவே சென்றுவிடும். ஆகக் குறைந்தது ஒரு அமைச்சைக் கூட ஜனாதிபதி வைத்திருக்க முடியாது. அதுவே 19வது திருத்தச் சட்டத்தால் நடந்துள்ளது. முன்னர் பாராளுமன்றம் ஒரு ஜனாதிபதியை தேர்வு செய்தது. உதாரணத்துக்கு வில்யம் கொபல்லாவ. இப்போது மக்கள் தேர்வு செய்கிறார்கள். அவருக்குள்ள அதிகாரம் மிக மிகக் குறைவு.
இலங்கையின் பொருளாதாரம் மட்டுமல்ல சமூக வீழ்சியும் ஏற்பட்டுள்ள தருணம் இது. மாற்றம் ஒன்று தேவையான நேரம். மாற்று போட்டிகள் இருந்தாலும் சஜித் - கோட்டா இருவர் இடையே மட்டுமே போட்டி உள்ளது. கரு அல்லது ரணில் போட்டியிட்டிருந்தால் கோட்டாவுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் சஜித் ஒரு பெரிய ஆள் இல்லாமல் போனாலும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏமைகளின் நாயகனாக சஜித்தை மக்கள் நினைக்கிறார்கள். அந்த மக்கள் தொகை அதிகமானது. இதனால் அதிக ஈர்ப்பு சஜித்துக்கே உள்ளது.

இந்த தேர்தல் இந்தியாவில் காங்கிரசுக்கும் - மோடிக்கும் இடையே நடந்த தேர்தலை ஒத்தது. மோடி மிகவும் கீழ் மட்டத்தில் இருந்து வந்தவர். மோடி எங்கள் பிரச்சனையை தீர்ப்பாரா என்பது மக்களின் நோக்கமல்ல. எங்களுடைய ஒருவர் அரசனாகிறான் என்பதே மக்களின் மகிழ்ச்சியாகிறது. மோடியை தோற்கடிக்க அடிமட்டத்திலிருந்து ஒருவர் வந்தால் மட்டுமே முடியும். அதுபோல சஜித் பின் தங்கிய சமூகத்தில் இருந்து வருபவர். சஜித்தின் தந்தையான பிரேமதாச அடிமட்ட மக்களுக்கு அதிக சேவை செய்தவராக மக்களிடையே பிரபல்யமானவர். உண்மையிலேயே ஏழைகள் தலை நிமிர்ந்து நிற்கும் பல திட்டங்கள் அவருடையவை. அதனால் வாழும் கிராமத்தவர்கள் அதிகமானவர்கள். அந்த திட்டங்களே வேறு பெயர்களில் நாட்டில் வலம் வருபவையாக உள்ளன. இலங்கையில் பின் தங்கிய சமூகத்தினர் அதிகமாக வாழ்கிறார்கள். இதைவிட சஜித்தை தமது மீட்பராக நினைக்கிறார்கள். இதனால் சஜித் இலகுவான வெற்றியொன்றை பெறப் போகிறார். அடிமட்ட மக்கள் எனும் போது அது தென் பகுதியில் மட்டுமல்ல வடக்கு - கிழக்கிலும் -மலையகத்திலும் கூட இதே நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலை கோட்டாவுக்கு இல்லை. ஐதேகவுக்கு உள்ள வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற சஜித்துக்கு அதிக வாய்ப்பே உள்ளது. பின் தங்கிய சமூகம் தனது சமூகத்தில் இருந்து வருபவரைத்தான் ஆதரிக்கும். இது மகிந்த மற்றும் கோட்டா தரப்புக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
இங்கே சஜித் பெரும் தர்சனவாதியா ? எதிர்கால சிந்தனை உள்ளவரா? என இந்த அடிமட்ட மக்கள் தேடப் போவதில்லை. எங்கள் ஒருவருக்கு வாக்களிப்பதாக வாக்களிப்பார்கள். சஜித் வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக