வியாழன், 10 அக்டோபர், 2019

நடிகை ரேவதி மணிரத்தினம் உட்பட . 49 பேரின் தேசத்துரோக வழக்கு கைவிடப்பட்டது

tamil.news18.com : திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து செய்யப்படுவதாக, பீகார் போலீஸ் அறிவித்துள்ளது. 
கும்பல் வன்முறையை தடுக்கக்கோரி, பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அனுரக் கஷ்யாப் உள்ளிட்டோர் மீது, பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிகழ்வானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் புதன்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய முசாஃபர்பூர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் சின்ஹா, நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தொடரப்பட்ட இந்த தேசத்துரோக வழக்கில், மனுதாரரான சுதிர்குமார் ஓஜா, போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியதாக கூறினார்.மேலும் அவரின் புகார் ஆதாரமற்றதாகவும், முழுக்க முழுக்க சமூக அமைதியை குலைக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதனால் மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 ஆளுமைகள் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்வதற்கு முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆதாரமற்ற புகாரை கொடுத்து தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக, சுதிர்குமார் ஓஜா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனோஜ்குமார் சின்ஹா தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக