சனி, 12 அக்டோபர், 2019

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு : 3 பெண்கள் உள்பட 11 திபெத்தியர்கள் கைது வீடியோ


சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு :  3 பெண்கள் உள்பட 11 திபெத்தியர்கள் கைது  தினத்தந்தி :  சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடத்த முயன்ற 3 பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர் சென்னை.
 சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வர இருப்பதையொட்டி, சென்னை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச இருக்கும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வர சில மணி நேரமே உள்ள நிலையில்  சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டல் அருகே முழக்கமிட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 5  திபெத்தியர்களை போலீசார்  கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பலத்த பாதுகாப்பையும் மீறி சீன அதிபர் தங்க உள்ள ஓட்டல் அருகே வந்து போராட்டம் நடத்திய போது போலீசாரிடம் சிக்கினர். சீன அதிபருக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி அவர்கள் சென்றனர்.
> சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா  ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

சென்னை விமான நிலையத்திற்கு வெளியேயும் ஒரு திபெத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்ப்பு தெரிவிக்கும் முயற்சிகளை முறியடிக்க கடந்த சில நாட்களாக 20 திபெத்தியர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மாமல்லபுரம் அருகே வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 4  சீன இளைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக