ஞாயிறு, 27 அக்டோபர், 2019

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்! பிரமாண்ட தயாரிப்பு ..... கதை வசனம் டைரக்சன் அன்னா ஹாசரே முதல் மோடி வரை

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் பிறந்த நாளை முன்னிட்டு இக்கட்டுரை :

இந்த நாட்டின் மிகப் பெரிய நகைச்சுவை...
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துவிட்டதாக கூறினார்.
இரண்டாமவர் இந்த விஷயத்தை பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
மூன்றாவதாக ஒரு பெண், அவருடன் இணைந்துக் கொண்டார்...
பின்னர் நான்காவது ஒரு ஆணும் அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஐந்தாவதாக ஒரு மனிதர் இந்த ஊழலை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஆறாவது மனிதன் ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்.
ஏழாவதாக ஒரு மனிதர் இந்த அத்தனை பேர்களுடைய கடின உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்து பொய் பிரச்சாரம் செய்து இந்த ஊழலுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டார்..
ஏழு வருடங்கள் கழித்து இன்று பார்த்தால்...
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
விடுவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் குற்றம் சொன்ன யாரும் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தும் ஒரே ஒரு துண்டு சீட்டை கூட ஆதாரமாக என்னிடம் தரவில்லை என்று நீதிபதி தீர்ப்பிலேயே எழுதியிருக்கிறார்.
மொத்த வழக்கையும் தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம்.
இப்போது
முதல் மனிதன்
வினோத்ராய் பி.சி.சி.ஐ. நிர்வாகியாக இருக்கிறார்.
மேலும் பத்ம பூஷன் விருதும் பெற்றுவிட்டார்.
இரண்டாவது மனிதர்
அன்னா ஹசாரே,
மௌனமாகிவிட்டு Z + பாதுகாப்பு பெற்றுவிட்டார்.
மூன்றாவது பெண் கிரன் பேடி புதுவை
மாநிலத்தின் கவர்னர் ஆகிவிட்டார்.
நான்காவது மனிதர்
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் ஆகிவிட்டார்.
ஐந்தாவது மனிதன் பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் ஆரம்பித்து வெற்றிகரமான தொழிலதிபராகிவிட்டார், கோடிகளில் நனைகிறார்.
ஆறாவது மனிதன் சுப்ரமணியம் சுவாமி எம்.பி. ஆகி பிஜேபி என்கிற கட்சியின் பொறுப்பாளராகிவிட்டார்.
ஏழாவது மனிதர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆகிவிட்டார்.

பெரும் படிப்பு படித்த நீங்கள் அனைவரும் முட்டாள் ஆனீர்கள்.
இது அனைத்தையும் ஆரம்பம் முதலே மறுத்து பக்கம் பக்கமாக ஆதாரத்துடன் எழுதிய நாங்கள் எங்க அண்ணன் ஆ .ராசாவின் பிறந்தநாளை திராவிட தீபாவளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
ஆரியம்
பெரும் சூழ்ச்சி வலைகளை பின்னி
சூழ்ந்து நின்று அடித்த போதிலும்
தளராது,
பகை வென்ற
எங்கள் தகத்தகாய சூரியன்
ஆ.ராசா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
தமிழ் போல் செழித்து வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக