வியாழன், 17 அக்டோபர், 2019

இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல… புதிய தமிழகத்துக்கும் நிதியளித்த தி.மு.க.... ..2014 இல்

கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு தி.மு.க அளித்த நிதி தொடர்பான ஆவணம்2014 தேர்தலில் கிருஷ்ணசாமிக்கு பிரசாரம் செய்த ஸ்டாலின்...vikatan.com - எஸ்.ஏ.எம். பரக்கத் அலி : நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க 40 கோடி ரூபாய் கொடுத்த விவகாரத்தில், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் எல்லாம் கர்ஜித்தபோது டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் ஏன் கர்ஜிக்கவில்லை? அதற்குக் காரணம் என்ன? விகடன் விடை தேடியபோது கிடைத்த தகவல் இது! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாயை தி.மு.க. கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுதொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க-வும் மாறி மாறி விளக்கமளித்தன. ஆனாலும் சர்ச்சைகள் ஓயவில்லை.



இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமான போது



கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி...இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமான போதுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும், கொங்கு நாடு தேசியக் கட்சிக்கு 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும் என மூன்று கட்சிகளுக்கும் 40 கோடி ரூபாய் வழங்கியதாகத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த செலவுக் கணக்கில் தி.மு.க தெரிவித்திருந்தது. எதற்காகக் கணக்குக் காட்டினோமோ எனச் சொல்லுமளவுக்கு தி.மு.க நொந்துகொண்டது. இடதுசாரிகளுக்கோ தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட, கொங்கு நாடு தேசியக் கட்சி வேட்பாளர் சின்ராஜ், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாகத் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க தெரிவித்தது. இதுதவிர, கொங்கு நாடு தேசியக் கட்சிக்கு 15 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல விழுப்புரத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாரும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார். அவருக்கும் 50 லட்சம் ரூபாய் தி.மு.க. வழங்கியது.


கொங்கு நாடு தேசியக் கட்சி கூட்டணி ஒப்பந்தம்..
ஆனால், ரவிக்குமார் தாக்கல் செய்துள்ள செலவுக் கணக்கில் தி.மு.க-விடமிருந்து 10 லட்சம் ரூபாயும், விடுதலைச் சிறுத்தைகளிடமிருந்து 50 லட்சம் ரூபாயும் பெற்றதாகக் கூறியுள்ளார். கோவையிலும் மதுரையிலும் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் பி.ஆர்.நடராஜனும் சு.வெங்கடேசனும் ஒட்டுமொத்தமாகச் செய்த செலவு 81 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாக்கல் செய்துள்ள வரவு செலவுக் கணக்கில் இந்தியா முழுவதுமே எட்டுக் கோடி ரூபாய்தான் தேர்தல் செலவு செய்ததாகத் தெரிவித்திருக்கிறது.



இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் எழுந்ததால், இடதுசாரிகள் மீதும் தி.மு.க மீதும் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் புகார் எழுப்பின. “அனைத்து வேட்பாளர்களுக்கும் தி.மு.க தலா 20 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் வழங்கியிருக்கிறது. இதுபற்றி சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்” எனத் திரி கொளுத்திப் போட்டார், அமைச்சர் ஜெயக்குமார்.


ஹெச். ராஜா
Vikatan
“தி.மு.க-விடமிருந்து வங்கி மூலமாக வெளிப்படைத்தன்மையுடன்தான் நிதி பெற்றோம். தேர்தல் செலவு தொடர்பான வரவு செலவுக் கணக்கு தாக்கல் செய்யும்போது இது தெளிவாகும்” என கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் விளக்கமளித்தார்கள். ஆனாலும், ”யாருக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று தேர்தல் ஆணையம் நேரிடையாகக் கணக்கு கேட்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார், பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.



இப்படிக் கூட்டணிக் கட்சிகளுக்கு நிதி அளித்ததை வெளிப்படையாகத் தேர்தல் ஆணையத்தில் சொல்வது ஏற்கெனவே பின்பற்றப்படும் நடைமுறைதான். இந்த நிலையில், முந்தைய தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க. எவ்வளவு நிதி அளித்தது என்பதை விகடன் தோண்டியெடுத்தது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் 41.51 கோடி ரூபாயைச் செலவழித்திருக்கிறது தி.மு.க. அந்தத் தேர்தலிலும் வேட்பாளர்களின் செலவுக்கும் தி.மு.க. தலைமைதான் பணம் அளித்திருக்கிறது. தி.மு.க. போட்டியிட்ட 35 தொகுதிகளில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் தரப்பட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட 5 தொகுதிகளில் தொகுதிக்குத் தலா 50 லட்சம் ரூபாய் தி.மு.க. அளித்தது.



திருவள்ளூரில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கும் மயிலாடுதுறையில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலிக்கும் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானுக்கும் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அளித்தது, தி.மு.க. இந்த விஷயத்தைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த வரவு செலவுக் கணக்கில் தெரிவித்திருக்கிறது. இப்படி 40 (புதுச்சேரி உட்பட) வேட்பாளர்களின் செலவுக்காக மட்டுமே 19.50 கோடி ரூபாய் தரப்பட்டது.



கூட்டணிக் கட்சிகளுக்கு 40 கோடி ரூபாய் கொடுத்த விவகாரத்தில், கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் கள்ள மெளனம் காத்தனர். அதற்குக் காரணம், அவர்கள் ஏற்கெனவே தி.மு.க-விடம் நிதி பெற்றதுதான்.


கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி…
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து இரண்டு நாள்கள் முன்புதான் கிருஷ்ணசாமி விலகினார். அதற்கு முன்புவரையில் கிருஷ்ணசாமி இந்த விவகாரம் பற்றி கருத்துச் சொல்லவில்லை.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும்கூட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு தி.மு.க நிதியுதவி அளித்திருக்கிறது. அந்தத் தேர்தலில் 97,34,41,798 ரூபாயை தி.மு.க. செலவழித்தது. 7 லட்சம் முதல் 25 லட்சம் வரையில் வேட்பாளர்களுக்குத் தகுந்த மாதிரி தொகைகளைக் கொடுத்திருக்கிறார்கள். தே.மு.தி.க.வில் இருந்து பிரிந்து, ‘மக்கள் தே.மு.தி.க.’ எனத் தொடங்கி தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மூன்று பேருக்கும் தி.மு.க பணம் அளித்திருக்கிறது. இதில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு 10 லட்சமும் வி.சி.சந்திரகுமாருக்கு 20 லட்சமும் கும்மிடிப்பூண்டி சேகருக்கு 25 லட்சமும் தரப்பட்டது. தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட ஐந்து முஸ்லிம் லீக் வேட்பாளர்கள், நான்கு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாயை தி.மு.க. வழங்கியிருக்கிறது.
2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் தி.மு.க. நிதியுதவி அளித்திருக்கிறது. ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கவில்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் கூட்டணிக் கட்சிகளுக்குத் தனிப்பட்ட முறையில் நிதி கொடுத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக