புதன், 25 செப்டம்பர், 2019

PMC Bank திவால்? வங்கி கணக்குகளில் இருந்து 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியுமாம்.. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (Punjab and Maharashtra Cooperative Bank

டெபாசிட் செய்தவர்கள் ஆர்பிஐ அறிக்கை tamil.goodreturns.in - gowthaman : தலைப்பில் படித்தது சரி தான் இனி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியுமாம்.
இந்த சட்டம் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (Punjab and Maharashtra Cooperative Bank)சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு போல அனைத்து வகையான கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்துமாம்.
இந்த தடை அடுத்த ஆறு மாத காலங்களுக்கு நீடிக்கும் எனவும் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. ஆர்பிஐ என்ன சொல்லி இருக்கிறார்கள் விரிவாகப் பார்த்துவிடுவோமே..!
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab and Maharashtra Cooperative Bank)இனி எக்காரணத்தை முன்னிட்டும் புதிதாக கடன்களைக் கொடுக்கவோ, கடன்களை ரெனீவ் செய்யவோ, புதிதாக முதலீடுகளைச் செய்யவோ, புதிதாக கடன் வாங்கவோ, புதிதாக டெபாசிட்களை வாங்கவோ, தன் சொத்துக்களை விற்கவோ கூடாது. இப்படி எதையாவது செய்ய வேண்டும் என்றால் ஆர்பிஐயிடம் இருந்து எழுத்துப் பூர்வமான ஒப்புதல் வாங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 6 மாத காலத்துக்கு இருக்குமாம்.
இந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab and Maharashtra Cooperative Bank)-ஐ நம்பி பணம் போட்டவர்கள், எக்காரணத்தை முன்னிட்டும், ஒரு கணக்கில் இருந்து 1,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள். அதாவது ஒருவருக்கு ஒரு சேமிப்பு கணக்கு ஒரு நடப்புக் கணக்கு இருக்கிறது என்றால், ஒரு சேமிப்புக் கணக்கில் இருந்து 1,000 ரூபாய் மற்றும் ஒரு நடப்புக் கணக்கில் இருந்து 1,000 ரூபாய் என மொத்தம் 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியுமாம்.
இதில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரும் சந்தேகம் என்ன என்றால்... இந்த ஒரு கணக்குக்கு 1,000 ரூபாய் என்பது ஒரு மாதத்துக்கு ஒரு முறையா..? அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரே ஒரு 1,000 ரூபாயா..? அல்லது நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய்க்கு மேல் எடுக்கக் கூடாதா..? என தங்கள் சந்தேகங்களைக் கேட்கிறார்கள். ஆனால் ஆர்பிஐ அறிக்கையில் அவைகள் சரியாக விளக்கப் படவில்லை. எனவே இந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab and Maharashtra Cooperative Bank)-ல் கணக்கு வைத்திருப்பவர்கள் முழுமையாக பயந்து போய் இருக்கிறார்கள்.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab and Maharashtra Cooperative Bank)-ல், நிர்வாக ரீதியாக ஏற்பட்ட தவறுகள் மற்றும் முறைகேடுகளால் தான் இந்த கடுமையான கட்டுப்பாடுகளை ஆர்பிஐ விதித்து இருக்கிறார்கள், என அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் அவர்களே ஒப்புக் கொண்டு இருக்கிறார். அதோடு வங்கி செய்திருக்கும் தவறுகள் மற்றும் முறைகேடுகளை எல்லாம் அடுத்த 6 மாத காலத்துக்குள் சரி செய்து கொள்ளப்படும் எனவும் சொல்லி இருக்கிறார் தாமஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக