புதன், 25 செப்டம்பர், 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி - அதிமுக வேட்பாளர்கள் - முத்தமிழ்ச்செல்வன் -ரெட்டியார்பட்டி வெ. நாராயணன்

ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமிவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்புமாலைமலர் : விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தி போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.


இந்நிலையில்  விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர்.

அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில்  விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ள முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இவர் 1985 முதல் 1991 ஆம் ஆண்டு வரை கல்பட்டு ஊராட்சி தலைவராக இருந்தவர்.

நாங்குநேரி தொகுதியில் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக உள்ள ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் போட்டியிடுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக