வெள்ளி, 20 செப்டம்பர், 2019

நிர்மலா சீதாராமனின் கார்பரேட் வரிச்சலுகை அறிவிப்பு... காப்பறேட்டுக்களுக்கு பம்பர் பரிசு!

corportate tax, nirmala sitharaman, tax rate cut, indian express, gst meeting, indian economy, sexsex today, indian expresstamil.indianexpress.com : உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி 22 சதவீதமும் புதிய உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு 15 சதவீத கார்பரேட் வரி என்ற...
உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி 22 சதவீதமும் புதிய உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு 15 சதவீத கார்பரேட் வரி என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவாவில் இன்று (செப்., 20) நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு வரி சலுகைகளை அறிவித்தார். பொருளாதார மந்தநிலையால் இந்த சலுகைகளை அறிவித்தார்.
நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரிகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும். கார்ப்பரேட் வரி அடிப்படையில் நாம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணையாக இருக்கிறோம்.

வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, 2019-20 நிதியாண்டு ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் ஒரு புதிய சட்டபிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. எந்தவொரு உள்நாட்டு நிறுவனமும் 22 சதவீதம் என்ற விகிதத்தில் வருமான வரி செலுத்த அனுமதிக்கிறது. அவை எந்தவொரு ஊக்கத்தொகையும் விலக்குகளும் பெறாது.
மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் அதிக முதலீடுகளைச் செய்ய விரும்புகிறோம். இதனால் பொருளாதாரம் வலுப்பெறும். நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் மற்றொரு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. இது அக்.,1க்கு பிறகு தொடங்கப்படும் எந்தவொரு புதிய உள்நாட்டு நிறுவனத்தையும் தொடங்குவதில் புதிய முதலீட்டுக்கு 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீத வரி மட்டும் செலுத்தினால் போதும்.
ஊக்கத்தொகை அல்லது விலக்குகளைத் தொடர்ந்து பெறும் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க, அவர்களுக்கு நாங்கள் குறைந்தபட்ச மாற்று வரி (MAT) நிவாரணம் அளிக்கிறோம். தற்போதுள்ள வரி 17.01 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் பாராட்டு : நிர்மலா சீதாராமனின் இந்த புதிய அறிவிப்பால், நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
பியூஷ் கோயல் வரவேற்பு : நிர்மலா சீதாராமனின் இந்த புதிய அறிவிப்பு, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லும். உள்நாட்டு நிறுவனங்களான கோல் இந்தியா, இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வரிச்சலுகை – ஹைலைட்ஸ்
உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி 30 சதவீதம் என்ற அளவில் இருந்து 22 சதவீதமாக குறைப்பு
உள்நாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த மாற்று வரியில் இருந்து விலக்கு
வரிச்சலுகை அறிவிப்பால், செஸ் வரி மற்றும் கூடுதல் வரிகளையும் சேர்த்து இனி 25.17 சதவீதம் மட்டும் கார்பரேட் வரி செலுத்தினால் போதும்.
தயாரிப்பு துறையில் புதிய முதலீடுகளை கவரும் பொருட்டும், உள்நாட்டு நிறுவனங்கள் அதிகளவில் தயாரிப்பு துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கார்பரேட் வரி 15 சதவீதமாக நிர்ணயம்.
புதிய நிறுவனங்கள் செஸ் வரி மற்றும் கூடுதல் வரிகளையும் சேர்த்து இனி 17.01 சதவீதம் மட்டும் கார்பரேட் வரி செலுத்தினால் போதும்.
செஸ் வரி மற்றும் கூடுதல் வரிகளை தொடர்ந்து செலுத்தும் நிறுவனங்களுக்கு குறைந்த மாற்று வரி (Minimum Alternate Tax (MAT)) யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
செஸ் வரி மற்றும் கூடுதல் வரிகளில் இருந்து விலக்கு கோருபவர்களுக்கு விதிக்கப்படும் குறைந்த மாற்று வரி 18.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த உயர்த்தப்பட்ட கூடுதல் வரிகளில் இருந்து, உள்நாட்டு நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக