வெள்ளி, 20 செப்டம்பர், 2019

தூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்!

tamil.oneindia.com -hemavandhana : கனடாவில் மனைவியை கொன்று காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்-
டோரண்டோ: "வெளிநாட்டு மாப்பிள்ளை, நல்லா பார்த்துப்பாருன்னு நினைச்சுதான் எங்க பொண்ணை தந்தோம். இப்போ எங்க வீட்டு விளக்கு அணைந்துவிட்டது.. தூக்குல போடுங்க அவனை" என்று கொதித்து போய் சொல்கின்றனர் பெற்றோர்!
தர்ஷிகாவுக்கு வயசு 27. இலங்கை வாழ் தமிழர். இலங்கையில் வசித்த போது தனபாலசிங்கம் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தர்ஷிகாவுக்கு 2 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர்.
தனபாலசிங்கத்துக்கு கனடாவில் வேலை கிடைத்துவிட்டது. ஆனால், தர்ஷிகா இலங்கையில்தான் தங்கியிருந்தார். பிறகு 2017-ல்தான் கனடா சென்றார்.

தர்ஷிகாவின் குடும்பம் ரொம்பவும் ஏழ்மையானது. அதனால் கனடாவில் ஏதாவது வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவலாம் என்று நினைத்தார். இதில்தான் தம்பதிக்குள் சண்டையும் தகராறும் ஏற்பட்டது. இவர்களை
குடும்பத்தினராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. அதனால் விஷயம் கோர்ட் வரை வந்துவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதியும் தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்திக்க கூடாது என்று தீர்ப்பளித்திருந்தார். ஆனால், தீர்ப்பையும் மீறி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்தித்ததுடன், கத்தியை கையில் எடுத்துக்கொண்டு துரத்தி துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார்.

இதை அங்கிருந்த பொதுமக்களே நேரில் பார்த்துள்ளனர். வழக்கு மனைவியை கொன்றுவிட்டு, ஸ்டேஷனில் தனபாலசிங்கம் சரணடைந்தார். இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆனால் மகளை பறிகொடுத்த தர்ஷிகாவின் பெற்றோர் வயிறு எரிந்து போயுள்ளனர "வெளிநாட்டு மாப்பிள்ளை, நல்லா பார்த்துப்பாருன்னு நினைச்சுதான் எங்க பொண்ணை தந்தோம். இப்போ எங்க வீட்டு விளக்கு அணைந்துவிட்டது. என் பொண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை தூக்குல போடுங்க. எங்க அழுகுரல் கனடா நாட்டிலுள்ள நீதித்துறையினருக்கு கேட்கணும்" என்று கதறுகின்றனர். இந்த சம்பவம், கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது <

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக