செவ்வாய், 24 செப்டம்பர், 2019

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் :விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும், நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் கட்சி தலைமையகத்தில் நேற்று விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என விருப்பம் தெரிவித்து பொன்.கவுதம சிகாமணி எம்பி. விருப்ப மனுவை அளித்திருந்தார்.


இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணல் முடிவடைந்த நிலையில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில், விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா.புகழேந்தி போட்டியிடுவார் என கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தி(வயது 66), ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக