புதன், 18 செப்டம்பர், 2019

ப.சிதம்பரம் பரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல்லை

தினமலர் : புதுடில்லி: "ஒருங்கிணைந்த இந்தியாவை ஆதரிப்பதில் காஷ்மீரில்
பரூக் அப்துல்லாவுக்கு நிகராக வேறு யாரும் இல்லை'' என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங். மூத்த தலைவருமான சிதம்பரம் கூறியுள்ளார்.
'ஐ.என்.எக்ஸ். மீடியா' மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தனது குடும்பத்தினர் உதவியுடன் 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் தனது கருத்துக்களை சிதம்பரம் பதிவிட்டு வருகிறார். வீட்டுக்காவலில் இருந்த ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் சிதம்பரம் கூறியிருந்ததாவது: ஜம்மு - காஷ்மீரையும் சேர்த்து ஒருங்கிணைந்த இந்தியாவை ஆதரிப்பதில் காஷ்மீரில் பரூக் அப்துல்லாவுக்கு நிகராக வேறு யாரும் இல்லை.
இவ்வாறு சிதம்பரம் கூறியிருந்தார். வைகோ மனுவே காரணம் பொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம்
தெரிவித்து காங். மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காஷ்மீரில் 92 சதவீத மக்கள் வரவேற்றுள்ளனர் என பா.ஜ. கூறியது.
'பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டவில்லை' என பார்லிமென்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என்றால் பரூக் அப்துல்லாவை இப்போது பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது ஏன்; வைகோ மனு தாக்கல் செய்தது தானே காரணம்? இவ்வாறு கபில் சிபல் கூறியுள்ளார் >

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக