திங்கள், 30 செப்டம்பர், 2019

பேருந்தில் நடத்துனரை தாக்கிய போலீஸார்.. டிக்கெட் வாங்க மறுத்து ... வீடியோ !


tamil.indianexpress.com ;நெல்லை மாவட்டத்தில் இருந்து கைதிகளை நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்தில் அழைத்துக் கொண்டு சென்றனர் ஆயுதப் படை காவல்துறையினர். அப்போது அவர்களிடம் பயண வாரண்டினை கேட்டிருக்கிறார் அப்பேருந்தின் நடத்துனர். காவல்துறையினர் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்காக வழங்கப்படும் வாரண்ட் அதுவாகும். அதை கேட்டுவிட்டு, மற்ற பயணிகளிடம் டிக்கெட் கலெக்ட் செய்ய சென்றார் நடத்துனர் ரமேஷ்.  பின்பு மீண்டும் வந்து காவலர்களிடம் வாரண்டை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், நடத்துனரை தாக்கினர்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். அந்த நிகழ்வினை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்ற தற்போது வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோ.  நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை காவலரை சட்ட ஒழுங்கு காவல்துறை கைது செய்துள்ளது.

; திருநெல்வேலி மூன்றடைப்பு பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. ரத்தம் வருகையில் தாக்கிய இருவர் குறித்தும் மூன்றடைப்பு காவல் நிலையத்தில் நடத்துனர் புகார் அளித்தார். ஆயுதப்படையை சேர்ந்த அந்த இரு காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் என்று தெரிய வந்தது. நேற்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் அவர்கள் இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். ஆனால் இன்று இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண் சக்திகுமார் அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக