வெள்ளி, 27 செப்டம்பர், 2019

குடியாத்தம் குமரன்... திமுக கட்சியில் இருந்து இடை நீக்கத்திற்கான பின்னணி

Arsath Kan | /tamil.oneindia.com :   சென்னை: திமுக கொள்கை பரப்பு துணைச்
செயலாளராக இருந்த குடியாத்தம் குமரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
இதற்கு காரணம் திமுக பொருளாளர் துரைமுருகன் தான் என திமுக சொற்பொழிவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை பூர்வீகமாக கொண்ட குமரன் தனது மாணவப் பருவத்தில் இருந்து திமுக மேடைகளில் முழங்கி வருகிறார். தொடக்கத்தில் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், ஒரு கட்டத்தில் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறினார். துரைமுருகனை நம்பி காலம் தான் கரைந்ததே தவிர வேறொன்றும் நடக்கவில்லை என குமரன் கூறியதாக திமுக பேச்சாளர் ஒருவர் கூறுகிறார். இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்தை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். இது தொடர்பாக கட்சிக்காரர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய குடியாத்தம் குமரன், போட்டியிட வேறு ஆளே இல்லையா எனத் தொடங்கி துரைமுருகனை பற்றி தனது உள்ளக்குமுறலை கொட்டினாராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக