வெள்ளி, 27 செப்டம்பர், 2019

சுபஸ்ரீ மரணம்; அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது!

Former AIADMK councilor jayagopal arrestednakkheeran.in - kalaimohan : சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ வாகனத்தின் மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி, அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இந்த பேனர் வைக்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபாலை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி தேன்கனிகோட்டையில் வைத்து தனிப்படை போலீசார் ஜெயகோபாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெயகோபால் விசாரணைக்காக சென்னை கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக