செவ்வாய், 3 செப்டம்பர், 2019

தமிழக பாஜகவுக்கு வடக்கு தெற்கு என இரண்டு தலைவரகள் நியமிக்க (சதி) ஆலோசனை?

பார்ப்பன அடியாட்களுடன் நிம்மி ஆலோசனை
தினமலர் : புதுடில்லி : தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை,
தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தலைவர் பதவியை கைப்பற்ற, அக்கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக பா.ஜ.,வை, வடக்கு, தெற்கு என, இரு மண்டலமாக பிரித்து, புதிய தலைவர்களை நியமிக்கலாமா என, பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருகிறது.
 தமிழகத்தில், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதில், பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது, தமிழிசைக்கு கவர்னர் பதவி அளிக்கப்பட்டு உள்ளதால், தமிழக பா.ஜ.,வுக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம், கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழிசைக்கு கவர்னர் பதவி கிடைத்து விட்டதால், மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் பார்வை, தற்போது, தமிழக பா.ஜ., தலைவர் மீது திரும்பியுள்ளது. மேலும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கட்சியை புதிய பாதையில் திருப்பி விட வேண்டும் என்ற எண்ணமும், மேலிடத்திற்கு இருக்கிறது. எனவே, தமிழக பா.ஜ.,வை வடக்கு, தெற்கு என, இரண்டு மண்டலமாக பிரித்து, புதிய தலைவர்களை நியமிக்கலாமா என, ஆலோசிக்கப்படுகிறது. இல்லையேல், தமிழக காங்கிரஸ் பாணியில், ஐந்து மண்டலங்களாக பிரித்து, ஐந்து செயல் தலைவர்களை நியமிக்கலாமா என்பது குறித்தும், பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக