செவ்வாய், 3 செப்டம்பர், 2019

8 துறைகளின் வளர்ச்சி வெறும் 2%.. என்ன செய்யப்போறீங்க?

GoodReturns Tamil : இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும், ஆனா அது இந்த அளவிற்கு மோசமான நிலையில் இருப்பது இப்போது தான் தெரிந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்து நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது முக்கியமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் உற்பத்திக்கும் தொழிற்துறைக்கும் அடிப்படையாக விளங்கும் 8 முக்கியத் துறைகள் அதாவது நாட்டின் Core sectors என அழைக்கப்படும் துறையின் வளர்ச்சி எப்போதும் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 
இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
2018 ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக இருந்த 8 துறைகளின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதத்தில் வெறும் 2.1 சதவீதம் என்கிற மோசமான நிலையை அடைந்துள்ளது. அதிலும் முக்கியமான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்புப் பொருட்கள் துறையின் வளர்ச்சி ஜூலை மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை அடைந்துள்ளது நாட்டு மக்களுக்கும், தொழிற்துறைக்கும் பெரும் அதிர்ச்சியாக விளங்குகிறது.
 
8 முக்கியத் துறை விவசாய உரம், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்புப் பொருட் துறை தான் நாட்டின் 8 முக்கியத் தொழிற்துறையாக விளங்கி வருகிறது. 
 
இத்துறைகளின் சராசரி வளர்ச்சி கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தற்போது 2.1 சதவீதம் என்கிற மோசமான நிலையை அடைந்துள்ளது. 
 
 இதேபோல் ஏப்ரல் ஜூலை காலாண்டில் இந்த 8 துறைகளின் சராசரி வளர்ச்சி 5.9 சதவீதமாக இருந்த நிலையில் நடப்புக் காலாண்டில் இதன் அளவீடு 3 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 8 துறைகள் தான் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டின் 40.27 சதவீத அளவை 
 
நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஜூன் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 25 காலாண்டுகளில் மோசமான நிலை என்கிற அளவிற்கு 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதன் அதிர்வுகளை இன்னும் சரிவர அடங்காத நிலையில் தற்போது வெளியாகியுள்ள 8 துறைகளின் வளர்ச்சி அளவீடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக