செவ்வாய், 3 செப்டம்பர், 2019

வெளியேறும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள்..! சரியும் சந்தை..!

tamil.goodreturns.in - gowthaman- : >இது போக
உள்நாட்டு முதலீட்டாளர்கள் மீது இருந்த மூல தன ஆதாய வரிகளையும் நீக்கினார். ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த விஷயங்களுக்கு எல்லாம் மசிந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக தங்கள் முதலீடுகளை விற்று பணத்தை வெளியில் எடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் சுமாராக 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் கடந்த ஆகஸ்ட் 23, 2019-ல் இருந்து சுமாராக 5,500 கோடி ரூபாயை சந்தையில் இருந்த தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள்.

மோசமான கார்ப்பரேட் வருமானங்கள், இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் கொடுக்க போதுமான நிதி நிறுவனங்கள் இல்லாமல் இருப்பது மற்றும் பொருளாதார மந்த நிலை என எல்லாம் சேர்ந்து அந்நிய நேரடி முதலீட்டாளர்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது அதனால் தான் அவர்கள் இப்போது இந்தியாவில் முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள் என அனலிஸ்டுகள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக