செவ்வாய், 3 செப்டம்பர், 2019

உத்தர பிரதேச பல்கலைக்கழகத்தில் கடும் அடிதடி... குழப்பத்தில் போலீசார்...

ruckus in amity university

நக்கீரன் : உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அமிட்டி பல்கலைக்கழகத்தில் 2 பெண்களுடன் ஏற்பட்ட வாகன பார்க்கிங் பிரச்சனை காரணமாக இரண்டு மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தாக்கப்பட்ட மாணவர்களின் நண்பர் ஒருவர் கூறுகையில், கல்லூரி நுழைவாயில் அருகே இரண்டு பெண்களும் தங்களது காரை நிறுத்தி வைத்து வழிவிடாமல் இருந்தனர். அப்போது சவுரவ் மற்றும் ஹர்ஷ் ஆகிய இருவரும் தங்களது வாகனத்திற்கு வழிவிடும்படி அந்த பெண்களிடம் கூறியுள்ளனர். அப்போது இருவருக்குள்ளும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த காவலாளி இருவரையும் சமாதானப்படுத்தி அந்த பெண்களின் காரை நகர்த்தி ஹரிஷ் மற்றும் சவுரவ் ஆகியோரின் வாகனத்திற்கு வழி ஏற்பாடு செய்து தந்துள்ளார். அப்போது அந்த இரண்டு மாணவிகளும் சவுரவ் மற்றும் ஹர்ஷை திட்டியதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.


பின்னர் இந்த இரண்டு மாணவர்களும் வகுப்பறைக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென சுமார் 20 பேர் வகுப்பறைக்குள் நுழைந்து சவுரவ் மற்றும் ஹர்ஷ் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். சரமாரியாக அவர்களை தாக்கிய அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட இரண்டு மாணவர்களும் காவல்துறைக்காக காத்திருந்தபோது, மீண்டும் அங்கு வந்த சிலர் ஆயுதங்களால் அவர்களை பலமாக தாக்கியுள்ளனர்.

பின்னர் அங்கு வந்த காவல்துறையினரிடம் அவர்கள் நடந்தவற்றை கூறி வழக்கு பதிவு செய்ய கூறியுள்ளனர். ஆனால் அந்த இரண்டு பெண்கள் ஏற்கனவே சவுரவ் மற்றும் ஹர்ஷ் மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளனர் என காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த நிலையில் பலத்த காயமடைந்த அந்த இரண்டு மாணவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்கள் தரப்பிலும், அடிவாங்கிய மாணவர்கள் தரப்பிலும் வெவ்வேறு மாதிரியாக கூறப்படுவதால் போலீசார் குழம்பியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக