திங்கள், 30 செப்டம்பர், 2019

ரிக் வேத காலம் பற்றி அறிவியல் ஆதாரம் இருக்கா?.... இல்லை!

Kokkarakko Sowmian : இன்று நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி காலத்தின் குரல் நிகழ்ச்சி அற்புதம்..!
கீழடி அகழ்வாராய்ச்சி ஒரிஜினல் சங்கிகளை எந்த அளவிற்கு மன உளைச்சலில் தள்ளியுள்ளது என்பதை அப்பட்டமாக படம்பிடித்துக் காட்டி விட்டது அந்த விவாதம். நன்றி திரு குணா..!
நம்ம ஆல் பர்பஸ் மாலன் சாருக்கு அந்தப் பக்கத்தில் டஃப் ஃபைட் கொடுக்கும் எழுத்தாளர் கிருஷ்ணன் தான் இன்றைக்கு அங்கே சங்கிப்படைத் தளபதி..! அவருக்கு பக்க வாத்தியம் வாசிக்கும் வேளை மட்டுமே மாலன் சாருக்கு..!
நம்மவர்களான பேராசிரியர்கள் ராஜவேலு, ராஜேந்திரன் மற்றும் சு. வெங்கடேசன் ஆகியோர் ஆதாரங்களை மூட்டை கட்டிக் கொண்டு வந்து அசால்ட்டாகவும் அடக்கமாகவும் அடுக்கிக் கொண்டிருக்க...
நம்ம சங்கித் தல கிருஷ்ணனோ... இலக்கியத்திலேயே ரிக் வேதம் தாம் மிகப் பழமையானது, தமிழ் சங்க இலக்கியங்கள் எல்லாமே அதற்கு பின்னால் வந்தது தான் என்று கூற...
நம்ம ஆட்களோ... யோவ், நாங்க இங்க அறிவியல் ரீதியான ஆதாரங்களை வைத்து மட்டுமே பேசுகின்றோம், அறிவியல் ரீதியாக நாங்கள் பழமையான நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் என்று ஆதாரங்களை அடுக்க...
அதற்கு நம்ம கிருஷ்ணனோ, உங்கள் அறிவியல் ஆதாரங்களில் சங்க இலக்கியம் பற்றி எதுவுமே இல்லை என்று கூற...
அதற்கான பற்பல ஆதாரங்களை நம்மவர்கள் அங்கே எடுத்து வீச...
நெறியாளர் குணா.... குறுக்கே புகுந்து, ரிக் வேதத்திற்கான காலம் பற்றி நீங்க சொல்றதுக்கு அறிவியல் ஆதாரம் இருக்கா என்று கிருஷ்ணன் முகத்தில் பவுன்ஸர் வீச...

நாங்க அறிவியல் சான்றையெல்லாம் நம்ப மாட்டோம், அகச்சான்றை மட்டுமே நம்புவோம் என்று என்னென்னவோ போட்டு குழப்பி தத்தளிக்க...
ஹேய்.... இதை அடிச்சி பிரயோசனமில்லை... இது வெறும் டம்மி பீஸு... இதையெல்லாம் காலச்சுவட்டில் கட்டுரை எழுத அனுமதித்தார்களே என்று கிண்டலாக சிரித்தவாறே கலைந்து சென்றனர் நம்மவர்கள்...!
இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் சங்கிகள் தாங்கள் தான் பாரதத்தின் பூர்வ குடிகள் என்று இங்கே நிறுவுவதற்கு எந்த அளவிற்கும் கீழிறங்கி பொய்களை வாய் கூசாமல் அள்ளி வீசுவார்கள். அதை எத்தனை பேர் சுற்றி நின்று ஆதாரங்களுடன் மறுத்தாலும், அவற்றை காதில் வாங்காமல்... சத்தம் போட்டு பொயை மீண்டும் மீண்டும் உரக்கப் பேசுவார்கள்... திரும்பத்திரும்ப அதைப் பேசுவார்கள்... சிவந்த தோளுடன் பேசுவார்கள்....
அதை நம்புவதற்கு ஒரு முட்டாள் கூட்டம் மட்டும் இருந்தால் போதும் அவர்களுக்கு..!
அவர்கள் பொய்யை அவ்வளவு சத்தமாக திரும்பத்திரும்ப கூச்சநாச்சமே இன்றி அரங்கேற்றும் போது...
நாம் உண்மைகளை அதை விட உரக்கச் சொல்ல வேண்டும். பல்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும். இன்னுமொரு புதிய முட்டாள் கூட்டம் இங்கே உருவாகமல் தடுக்க வேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக