திங்கள், 30 செப்டம்பர், 2019

மாபா பாண்டியராஜன்: கீழடி ஆராய்ச்சி தமிழர் நாகரிகம் அல்ல பாரத நாகரீகம்.. .இவர் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராம்?

Muralidharan Pb : தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரே, கீழடி ஆராய்ச்சி தமிழர்
நாகரிகம் அல்ல பாரத நாகரிகம் என்று கூறியுள்ளாரே?
எவ்வளவு சென்ஸிடிவான ஒரு கருத்து, இதைச் சொல்ல எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்? அதுவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரே கூறுவது பொழுது போக்கோ வேடிக்கையோ அல்ல.
அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருத்தர் பேசுவது எல்லாமே இயல்பானது என்று நினைத்தால் நீங்களும் ஏமாளியே.
எல்லோரையும் பேச வைத்து எவ்வளவு பெயரைக் கெடுக்க முடியுமோ அவ்வளவு செய்வது தான் பாஜகவின் உத்தியாக நான் பார்க்கிறேன்.
அந்த அளவிற்கு இவர்களை ஆட விட்டுவிட்டு பின்பு கிடுக்கி பிடி போட்டுள்ளதாக கருதுகிறேன்.
ஏனெனில், ஒரே நாளில் சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் என்ற ஊழல்வாதியை நல்லவராக காட்டிய பாஜகவின் கைப்பொம்மையாக செயல்படும் தேர்தல் ஆணையம் அவரது 6 ஆண்டு தண்டனையை ஒரே ஆண்டாக அவரது ஊழல் தண்டனையை குறைத்துவிட்டு அவரை நல்லவராக ஆக்கியது. (ஊடகங்களில் இது பற்றி பேசினார்களா எனத் தெரியவில்லை)
எனவே தனக்கு ஒத்து வந்தால் அதிமுகவினர் நல்லவர்கள் இல்லையேல் சசிகலாவின் நிலைமை தான் இப்போது ஊழலுக்கு துணை போன அதிமுகவினர் அனைவருக்கும்.

இதுதான் பாஜகவின் கணக்கு என்பது எனது கணிப்பு.
அதே சமயத்தில் அதிமுகவினர் கணக்கு எதையும் கடைசி நேரத்தில் இரட்டை இலை என்ற வாக்கு வங்கி உள்ளது என்று அதை வைத்து சரி கட்டிவிடலாம் என நினைக்கிறது. அந்தோ பரிதாபம். வாக்குகளை பெற ஜெயலலிதாவோ எம்ஜிஆரோ இல்லை. அதே சமயத்தில் பொதுச்செயலாளர் இல்லாத கட்சி என்று இரட்டை இலை இல்லாத ஒரு அதிமுகவாக மாற்ற தேர்தல் நேரத்தில் பாஜக முயன்றாலும் ஆச்சர்யம் இல்லை.
மொத்தத்தில் பாஜகவுக்கு தமிழ்நாடு கிடைக்க அதிமுக பெரிய தடையாக இருக்குமேயானால் அந்த பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதில் பாஜக தயங்கவே தயங்காது.
மீண்டும் கூறுவது இதுதான். திமுகவிற்கு எதிராக அதிமுக தான் தமிழகத்துக்கு நல்லது. மற்றவை எல்லாமே பாஜகவின் தலையாட்டி பொம்மைகள். எல்லாரும் என்றால் இருக்கும் கட்சிகள், இனி வரப்போகும் கட்சிகள் அனைத்துமே தான்.
ஆனால் நிச்சயம் எடப்பாடி, ஓபிஎஸ் என்ற முதுகெலும்பு இல்லாத தலைமையிலான அதிமுக அல்ல. இன்றைய அதிமுக பாஜகவின் இன்னோரு பிரிவு.
எல்லா விவரங்களையும் தெரிந்த அமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி உளறுவதும் எதார்த்தம் அல்ல.
எல்லாமே நாடகம் தான். மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக