ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

திராவிட மொழிக்குடும்பம் இந்தியா முழுவதும் ... ஆரிய ஆதிக்கவாதிகளின் கருத்துக்கள் தவிடு பொடி!


திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவை தாண்டி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வரைக்கும் பரவி இருக்கிறார்கள்.
அவர்களின் மூலாதாரமாக இருப்பது தமிழ் மொழியும் தமிழ்நாடும்தான். ஆரியர்களின் / பார்ப்பன பனியாக்களின் மிகபெரும் பயம் இதுதான்!
தமிழ் மொழிக்கும் இதர திராவிட மொழிக் குடும்பத்திற்கும் இடையில் உள்ள தாய் சேய் உறவு என்பது தங்களின் ஆரிய ஆத்திகத்துக்கு அடிக்கப்படும் ஆப்பு என்பது அவர்களுக்கு புரிகிறது.
தமிழ் மொழியை இதர திராவிட மொழிக்குடும்ப தொடர்பில் இருந்து வெட்டிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் தற்போதைய நிகழ்ச்சி நிரல்.
அதை நோக்கித்தான் ஆரியர்களின் முழு வேலைத்திட்டமும் தற்போது இருக்கிறது.
தமிழகத்தின் ஜாதி அமைப்புக்கள் தமிழ் தேசிய போர்வையில் இருக்கும் கூலிப்பட்டாளங்கள், விலை போன ஊடகங்கள் . கோயில்கள் இதர மதவழிபாட்டு நிறுவனகள் எல்லாமே தற்போது ஆர் எஸ் எஸ் இனி சந்தா பணத்தை கை நீட்டி வாங்குகிறார்கள் . தமிழுக்காக ஓவர் டைம் கூவும் கோஷ்டியில் இனி பாஜகவும் முழு மூச்சுடன் இயங்கும் .
 ஏனெனில் தமிழ் மொழியானது இதர திராவிட மொழிக்குடும்பதுடன் ஓரணியில் சேர்ந்து விடக்கூடாது என்பதுதான் அவர்களது கவலை.

திராவிட மொழிக் குடும்பமானது கருத்தியல் ரீதியாக ஒரு மானுட்டவியல் வளர்ச்சி தரத்தில் ஒரு உயர்ந்த இடத்தில இருக்கிறது. மாறாக ஆரிய மொழிக்குடும்பம் என்று கூறப்படும் பார்ப்பனீய கருத்தியலானது மக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஒரு ஆண்டான் அடிமை கலாசாரம் சார்ந்ததாக இருந்திருக்கிறது.


இன்று இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கும் ஜாதி கலாச்சாரம் அந்த பார்ப்பனீய கருத்தியல்தான். இது திராவிட நாகரீகத்தில் இல்லை! இன்றுவரை அந்த பார்ப்பனீய கருத்தியல்தான் இந்தியா அதிகார வர்க்கத்தின் பெரும் தலைமை ஸ்தானத்தில் இருக்கிறது.

தங்களின் இந்த அதிகார மேலாண்மை எதிர்காலத்திலும் தொடர்வதற்கு திராவிட கருத்தியல் பெரும் அச்சுறுத்தல் என்பது அவர்களுக்கு தெரியும் . அதிலும் கீழடி நாகரீகமும் சிந்து சமவெளி நாகரீகமும் ஒன்றோடுன்று தொடர்புடையது என்ற உண்மை தற்போது வெளிப்பட்டு கொண்டு இருக்கிறது. இது உண்மையான் ஆரிய திராவிட போரின் புதிய பரிமாணம் ஆரம்பமாகி விட்டதன் அறிகுறியாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக