வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கட்டுமானத்துறையில் அரசாங்கமே முதல்போடாத பார்ட்னர்! 75% பங்குபயனை அடைகிறது!


Sundar P : கொள்ளைக்கார உலகம்:-
ஒரு பில்டர் சென்னையில் 1.5 கோடிக்கு 1000 சதுரமீட்டர் இடம்வாங்குகிறார்.
பத்திரசெலவு மற்றும் பதிவுகட்டணம் 11% = 16.5 லட்சம்
அதில் 1300 சதுரமீட்டரில் ஒரு அபார்ட்மெண்ட் கட்டுகிறார் என்றால் அதன் அதன் கட்டுமான செலவு 1300 x 20000 = 2.6 கோடி
இதர செலவுகள்:
-ஆர்க்கிடெக்ட் 3% (7.8 லட்சம்),
-ஸ்ட்ரெச்சுரல் 2% (5.2 லட்சம்)
- கட்டுமானசெலவில். அபிவிருத்திகட்டணம் @200 சதுரமீட்டருக்கு (2.6 லட்சம்)
- மேல்நிலைத்தொட்டி (5லட்சம்)
மொத்தம் = 1.8 கோடி
பில்டர் 13 வீடுகள் ஒவ்வொரு வீடும் 100 சதுரமீட்டரில் கட்டுகிறார்.
அதன் ஒன்றின் விலை 45 லட்சம் என விற்கிறார்.
பிளாட் வாங்குபவரின் செலவுகள் :
வீட்டின்விலை 45 இலட்சம்
GST 5.6 லட்சம்
ஆவணசெலவு 1.35 லட்சம்
பதிவுகட்டணம் 90 ஆயிரம்
போன்றவற்றை பிளாட் வாங்குபவர் செலவுசெய்கிறார்
பில்டர் 1% வாட்வரியாக 45 ஆயிரம்கட்டுகிறார்
ஆகா மொத்தம் ஒரு வீடு விற்கப்படும்போது ஒரு வீட்டுக்கு 8.3 லட்சம் ரூபாய் அரசு வசூலிக்கிறது
13 x 8.3 இலட்சம் = 1.8 கோடி

வீடுவாங்குபவர் ஏற்கனவே தான் சேர்த்துவைத்த 45 இலட்சத்திற்கு வருமானவரி கட்டி இருக்கிறார்
அதேபோல் பில்டரும் 1.5 கோடிக்கு வருமானவரி கட்டிஇருக்கிறார்.
பில்டருக்கு 1.5 கோடிக்கு இடம் விற்றவர் தோராயமாக 10 இலட்சம் வரியை முதலீட்டு இலாபமாக இடம்விற்றதில் கட்டியிருப்பார்.
ஆக மொத்தம் அனைத்து கட்டுமான வேலைகளும் முடித்து பில்டர் அனைத்து பிளாட்டுகளையும் விற்று பெற்ற தொகை:
13 x 45 லட்சம் = 5.85 கோடி
கட்டுமானசெலவு = 1300 x 20000 = 2.6 கோடி
இடத்தின்விலை மற்றும் அப்ரூவல் கட்டணம் = 1.8 கோடி
மொத்தம் செலவு= 4.4 கோடி
மொத்த வருமானம் = 5.85 கோடி
லாபம் = 5.85 – 4.4 = 1.45 கோடி
இதில் வருமான வரி 30% போகமீதி = 1 கோடி
முடிவுரை :
பில்டர் 3 வருடங்கள் கஷ்டப்பட்டு பாடுபட்டு கட்டிடத்தை கட்டி அந்த 13 பிளாட்டுகளையும் நாயாய் அலைந்துவிற்று அதன்மூலம் அவர் பெரும் வருமானம் 1 கோடி.
எந்த வித முதலீடும் இல்லாமல் அரசுபெரும் வருமானம் : 2கோடியே 38லட்சம்
(இடம் விற்றவரிடம் 10 லட்சம் (முதலீட்டு இலாப வாரியாக)
இடம் வாங்கியவர்களிடம் 1.8 கோடி (GST , பத்திரசெலவு)
பில்டரிடம் 45 லட்சம் – வருமானவரியாக
ஆக மொத்தம் 2.38 கோடி)
இதுதான் இன்றைய கட்டுமானதொழிலின் நிலை
இதில் கொள்ளை லாபம் பார்ப்பது யார் என்பதை நீங்களே புரிந்துகோள்ளுங்கள்
இதுமட்டுமல்ல
தொழில்வரி,
தொழிலாளர் நல நிதி மற்றும்
அரசு அதிகாரிகளுக்கு கையூட்டுகள்
லோக்கல் தாதாக்களுக்கு மாமூல்.....
இப்படி இன்னும் இருக்கின்றன
கட்டுமானத்துறையில் அரசு ஒரு 75% பங்குபயனை அடையக்கூடிய கூடிய முதல்போடாத பார்ட்னர்.
இதுதான் இன்றைய வரி கட்டமைப்பின் உண்மையான நிலை.
- My Engineer's

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக