திங்கள், 30 செப்டம்பர், 2019

நடுநிசி சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. 3 மணிக்கு காதலிக்காக கணவன் கொலை... சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்..!!!

incident in sivakangai incident in sivakangai incident in sivakangai nakkheeran.in - nagendran: பில்லி சூனியம், செய்வினை மாந்தீரீகத்தால் ஏற்பட்ட தகாத தொடர்பு பழக்கத்தால் நடுநிசியில் சுடுகாட்டில் நிர்வாண பூஜையை முடித்துவிட்டு, அதற்கடுத்த இரண்டு மணி நேரத்தில் காதலி, கூட்டாளிகள் துணையுடன் கணவனை கொலை செய்த சாமியாரை ஆறே மணி நேரத்தில் கைது செய்து அசத்தியுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பாப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவிற்காக வரும் செவ்வாய்க்கிழமையன்று மாநில ஆளுநர் வருகை தரும் நிலையில், அவருக்காக காரைக்குடியில் பாதுகாப்பை பலப்படுத்தி கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த காரைக்குடி துணைச்சரகப் போலீசாருக்கு அவ்வளவு எளிதாக பொழுது புலரவில்லை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே அலறிய தொலைபேசியால் காரைக்குடி தந்தை பெரியார் 4 வது வீதியிலுள்ள ஒரு வீட்டின் முன் ஆஜரான காரைக்குடி டி.எஸ்.பி.அருண், வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தினேஷ் உள்ளிட்டபோலீசாரை மொட்டை மாடியில் குப்புற கிடந்த பிணம் தான் வரவேற்றியிருக்கிறது. 
கொலையுண்டு கிடந்தது வெளிநாட்டிலிருந்து திரும்பிய மணிமுத்து என்றும், வீட்டினுள் அவரது மனைவி பூமதி மற்றும் அவரது குழந்தைகள் பிரவீனா (20), கமலக்கண்ணன் (19), சஞ்சய் அரவிந்த் (17) இருப்பதும் தெரியவந்தது. கொலைக்கானக் காரணம், கொலையாளி யார் என போலீசார் தடயங்களை ஆய்வு செய்துக் கொண்டிருக்கையில், கொலையாளிக்கு சாதகமாக மழையும் அழுத்தமாக பெய்து தடயத்தைத் தேடுவதில் சிரமத்தை தந்தது. எனினும், விடாப்பிடியாக முன்னேறிய போலீசார் கொலைக்கானக் காரணம் தெரிந்து கொலையாளிகளை ஆறே மணி நேரத்தில் கைது செய்திருப்பது மக்கள் மத்தியில் நிம்மதியினை அளித்திருப்பது ஆறுதலான விடயமே.



 "கொலையுண்ட நபர் மொட்டை மாடியில் உடலெங்கும் காயம்பட்டிருக்க அவரது மனைவி பூமதியின் அழுகையோ செயற்கைத் தனமாக இருந்தது. அது போக, " அவருக்கும் (மணி முத்துவிற்கும்) அவரது சகோதரி குடும்பத்திற்கும் சொத்துத் தகராறு உள்ளது. அவங்க தான் இந்த கொலையை செய்திருக்கனும் என அடிக்கடி கூறி வந்ததும் சந்தேகத்தை வலுவடைய செய்தது. இதனால் அந்தம்மாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முறைப்படி விசாரிக்கையில், ராமேஸ்வரம் சாமியார் வேல்முருகன், கூட்டாளிகள் ராமநாதபுரம் பிரகாஷ் மற்றும் குமார் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாக உண்மையை ஒத்துக்கொள்ள கொலையாளிகளான சாமியாரையும், பிரகாஷையும் கைது செய்து காரைக்குடிக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் கொலைக்குப் பயன்படுத்திய நிஸான் சன்னி காரும் (TN22-CU 8579) கைப்பற்றப்பட்டுள்ளன. தப்பியோடிய குமாரும் சிக்கும் பட்சத்தில் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களும் கிடைக்கும்." என்கின்றது காவல்துறை.


 இதே வேளையில், தகவல் தொழில் நுட்பமும் காவல்துறைக்கு சரியான நேரத்தில் கைக் கொடுத்திருக்கின்றது. குறிப்பிட்ட  எண்ணிலிருந்து குறிப்பிட்ட எண்ணிற்கு நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து ஏறக்குறைய 20 தடவைகள் தொடர்ச்சியாக அடிக்கடி தொடர்புக் கொள்ளப்பட்டது. அது போக, நடுநிசி 02.45க்கு வந்த தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு, மீண்டும் 03.15க்கு அதே எண்ணிற்கு அழைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்குரியவர்கள் சாமியார் வேல்முருகனும், பூமதியும் என்பது நிருபணமாக 02.45 டூ 03.15 எனும் இந்த இடைப்பட்ட வேளையில் தான் கொலை நடந்திருக்க முடியும் என கண்டறியப்பட்டதும் போலீசாருக்கு சாதகமே.

incident in sivakangai

விசாரணை அதிகாரிகளோ, " கொலையாளியான ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திட்டக்குடிப் பகுதியினை சேர்ந்த சாமியார் வேல்முருகன் 15 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் அருகிலுள்ள கூட்டுக்கொல்லை எனும் கிராமத்திற்கு புதையல் எடுத்து தருவதற்காக வந்துள்ளான். அப்பொழுது அங்கு வைத்து தான் மணிமுத்துவின் மனைவி பூமதிக்கும், சாமியாருக்கும் பழக்கம் உண்டானது. ஒருக்கட்டத்தில் பூமதியின் கணவர் மணிமுத்து வெளிநாட்டிலேயே பணிக்காக நிரந்தரமாக இருந்ததும், குழந்தைகளின் கல்விக்காக காரைக்குடியில் வசிக்கவுள்ளேன் எனக் கூறி காரைக்குடியில் தனியாக வீடு எடுத்து வசித்ததும் இருவருக்கும் சாதகமானது. எப்பொழுதாவது ஊருக்கு திரும்பும் மணிமுத்துவிற்கு பூமதியின் தகாத தொடர்பு தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரத்தில் திரும்பிய மணிமுத்துவிற்கு அரசல் புரசலாக விவகாரம் தெரியவர மனைவியைக் கண்டித்திருக்கின்றார். பூமதியோ தன்னுடைய காதலனான சாமியாரிடம் கூறி, கணவனின் கை காலை உடைக்க சொல்லியிருக்கின்றார்.

incident in sivakangai

ஆனால், இதுதான் தருணமென  அமாவாசை தினத்தில் நடுநிசி 1 மணிக்கு ராமநாதபுரம் அல்லிக்கண்மாயில் நிர்வாண பூஜையை நடத்திவிட்டு தன்னுடைய கூட்டாளிகளான பிணம் எரிக்கும் தொழிலாளியான பிரகாஷையும் அவனின் நண்பனான குமாரையும் தன்னுடைய காரிலேயே காரைக்குடிக்கு கூட்டி வந்து, அவர்களது துணையுடன் அதிகாலை 3 மணியளவில் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மணிமுத்துவை அனைவரும் குத்திக் கொன்றிருக்கின்றனர். இவர்களின் கள்ளக்காதலால் உயிர்போனது ஒருபுறமிறக்க, அவர்களது குழந்தைகளின் நிலை தான் பரிதாபத்திற்குரியது" என்கின்றனர் அவர்கள். இதனால் இப்பகுதியில் பரப்பரப்புத் தொற்றியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக