புதன், 21 ஆகஸ்ட், 2019

காஷ்மீரிகளின் பக்கமாக நாம் ஏன்? எதிர்நோக்கும் அபாயங்கள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி .. வீடியோ

கிருபா முனுசாமி : காஷ்மீரின் மீதான இந்திய ஆதிக்கத்தை கொண்டாடிக்கொண்டே, இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாடுவது போன்றதொரு மூடத்தனம் இல்லவே இல்லை.
உண்மையில் இது சுதந்திர நாடு என்று அழைக்கப்பட தகுதியுடையது தானா? ஒருவித ஆதிக்கத்தை ஆதரித்தபடியே மற்றொரு ஆதிக்கத்தை எதிர்க்க முடியாது. ஆதிக்கத்தின் வடிவம் மாறலாம். ஆனால், தன்மை மாறுமோ?
While celebrating the Indian occupation of Kashmir on one hand, how could you celebrate Indian independence on the other? Does this country even have the moral right to be called independent? Kashmir is landlocked, its occupation has happened in all our names, casteism and communalism has taken a new shape ever, freedom of speech and expression is curtailed, right to choice of food is unexercisable, democracy is dead, secularism is murdered in all possible ways, and I wonder what independence you are celebrating!
"உண்மையான சுதந்திர இந்தியா என்பது ஜாதியத்திலிருந்து விடுதலையடைந்ததாக இருக்க வேண்டும்" என்று நம்பினார் பெரியார். இந்திய சுதந்திரம் என்பது ஆங்கிலேயர்களிடமிருந்த ஆட்சி இந்தியாவில் உள்ள பிராமணர் உள்ளிட்ட முற்பட்ட சாதியினரின் கைகளுக்கு மாறிய ஒரு சம்பவம் தானே ஒழிய, அது ஜனநாயகத்தின் வருகை அல்ல; பிராமணிய நாயகத்தின் வெற்றி என்று வர்ணித்த பெரியார், ஆகஸ்ட் 15, 1947-ஐ ஒரு துக்க நாள் என்றும் அழைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக