ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

இந்துத்வா பிரசார தொலைக்காட்சிகளும் நடுநிலை லேபலில் வரும் ஆர் எஸ் எஸ்காரர்களும் .. தமிழகத்தின் சாபக்கேடுகள்

Kandasamy Mariyappan நடுநிலையாளர்கள் என்ற தீவிரவாத அரசியல்:
நடுநிலையாளர்கள் என்ற போர்வையில், திமுகவை பலம் இழக்கச் செய்ய ஒரு பெரும் கூட்டம் கிளம்பியுள்ளது.
பொதுவாக மக்கள் நடுநிலையாளர்களின் வாதங்களை சிறிது மதிப்பவர்கள். அதனால்தான் பாஜக கட்சி சாயம் இல்லாமல் நடுநிலை என்ற போர்வையில் கோலாகல ஸ்ரீ ஜீன்வாஸ், ராமசுப்பிரமணியம், பானு கோம்ஸ், ரவீந்திரன் துரைசாமி, துக்ளக் ரமேஷ், சுமந்த் ராமன் etc... போன்ற பாஜக ஆட்களை விவாத நிகழ்ச்சிகளுக்கு அனுப்புகிறது.
சமீபத்தில் ரவீந்திரன் துரைசாமியின் பேட்டியை பார்க்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு இந்து மதவெறியரை விட, ஒரு மதத் தீவிரவாதியாகவே மாறி, பேட்டி கொடுத்ததை கவனிக்க முடிந்தது. இந்து!!!??? வாக்குகள் திமுகவிற்கு எதிராக consolidate ஆகத் தொடங்கி விட்டது என்கிறார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
திமுக பெற்ற 4,85,340 வாக்குகள் முழுவதும் இஸ்லாமியர்கள் வாக்குகள் என்கிறாரா?, அதிமுக பெற்ற 4,77,199 வாக்குகளில் இஸ்லாமியர்கள் வாக்குகள் ஒன்று கூட இல்லை என்கிறாரா? என்ன உளறுகிறார்.
2000த்திற்குப் பிறகு, இஸ்லாமியர்களின் வாக்குகள் 40% அதிமுகவிற்கும், 35% திமுகவிற்கும் 25% மற்ற கட்சிகளுக்கும் என்ற நிலைதான் உள்ளது. இந்த வேலூர் தேர்தலில் ஒருவேளை அது கூட்டணி அடிப்படையில் திமுகவிற்கு 50%, அதிமுகவிற்கு 40% வாக்குகளாக மாறியிருக்கும்.

ஆனால் ரவீந்திரன் துரைசாமி, நடுநிலையாளர் என்ற போர்வையில் மத வெறுப்பை வளர்க்கிறார். வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக மத வெறுப்பை தூண்டி அதன் மூலம் இந்துத்துவா கும்பல் பயன் பெறும் வகையில் பேசுகிறார். (Religious consolidation)
தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டின் அரசியலுக்கு இது ஒரு பேராபத்து.
நான் மேலே கூறிய நடுநிலையாளர்களை RSS/பாஜக, இந்துத்துவா கும்பலாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர நடுநிலையாளர்களாக அனுகவே கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக