ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

BJP...ஒரு மீனவனை மருத்துவன் ஆக்கினாலும் அவனுக்கு மீன் மேலேதான் .....பாஜக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா

Prakash JP : பிஜேபி ஆர்எஸ்எஸ் ஹிந்துத்துவா கும்பல் சொல்லும் கல்விக்
கொள்கை இதுதான் குலக்கல்வி.. கங்கையில் தலைமுறை தலைமுறையாக மீன் பிடிக்கும் ஒருவனுக்குத்தான் எங்கு மீன் கிடைக்கும், என்பது தெரியும், அவனுக்கு படிப்பு வேண்டுமென்றால் மீன்பிடிப்பு பற்றிய கல்வியை கற்றுக்கொண்டுக்க வேண்டும், இதனால் அவனும் ஆதுனிக்(நவீன முறையில் மீன்களை பிடித்து விற்பனை செய்யும்) திறன் வளரும்.
ஆனால் ஆங்கிலேயன் நமது நாட்டின் வளர்ச்சியை தடை செய்வதற்கென்றே மீனவனுக்கு அவனுக்கு தேவையில்லாத கல்வியை திணித்துவிட்டான்.
அதுதான் இன்று நடக்கிறது, ஒரு மீனவன் மருத்துவனானாலோ, பொறியாளர் ஆனாலோ அவன் என்னதான் திறமையான கல்வியாளனாக ஏட்டுக்கல்வியைப் படித்தாலும் அவனுக்கு மீன்பிடிக்கும் கலைதான் மேல் ஓங்கி இருக்கும், இன்றுகூட மீனவராக உள்ள ஒரு மருத்துவனை மீனவர் அல்லாத ஒரு மருத்துவரையும் கங்கையில் மீன் பிடிக்க அனுப்புங்கள் மீனவராக உள்ள மருத்துவர் கூடை நிறைய மீன்களை அள்ளிவருவார், மீனவர் அல்லாத மருத்துவர் மீனின் நாற்றத்தைக் கூட சகிக்க இயலாதவராக இருப்பார்.
நமது நாட்டில் இவ்வளவும் பிரச்சனைகளுக்கும் யார் காரணம் ஆங்கிலேயன் தான், அவனுக்கு முன்பு வந்தவர்கள் அனைவரும் அவரவர்களுக்குத் தேவையான கல்வியைக் கொடுத்தனர், ஆனால் ஆங்கிலேயன் வந்து பாரம்பரிய தொழில் புரிந்தவர்களை குழப்பி விட்டார்கள். ஆகையால் தான் தற்போது அவர்களது தொழிலிலும் நல்லவிதமாக செயல்பட முடியவில்லை. புதிய தொழிலில் திறன்பட செயல்பட முடிவதில்லை, இவர்களுடைய வேலைகளை எல்லாம் அலுவலகத்தில் உள்ள திறமையனாவர்கள் சரிசெய்துவிடுகிறார்கள்.

இதனால் காலவிரயம் ஏற்படுகிறது, இது நாட்டின் வளர்ச்சியை கடந்த 100 ஆண்டுகளாக கடுமையாக பாதித்துவந்தது,
நாம் செய்யவேண்டியது அவரவர்களுக்கு உரிய தொழிலுக்கான திறமைகளை அவர்வரர்களின் வாரிசுகளுக்கு வழங்குங்கள். கல்வியும் தேவை அதே நேரத்தில் நான் முன்பு கூறியது போல் கங்கையில் மீன்பிடிக்கும் மீனவனின் வாரிசுக்கு மீன்பிடிக்கலையை கற்றுக்கொண்டுக்கவேண்டும்.
நமது கல்வி முறை இதுதான் இதை கொண்டுவந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும்
- பாஜக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா (திக்கம்கர்) கங்காசாகர் நகரில் பாஜக மீனவர் பிரிவு நிர்வாகிகளுடன் பேசியது.
# பகிரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக