திங்கள், 12 ஆகஸ்ட், 2019

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள்

நிலச்சரிவு கல்யாணம்
tamil.oneindia.com - hemavandhana : திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வயது மகனை நெஞ்சோடு இறுக கட்டி அணைத்தபடி இளம்தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களை கலங்க வைத்து வருகிறது.
அதிர்ச்சி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மக்கள் கடுமையான அவதிக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 72-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்கள் மண்ணில் புதைந்து போயுள்ளதால், தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் அல்லும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர்.


கல்யாணம்

இந்நிலையில் மலப்புரத்தில் மீட்பு படையினர் ஒரு காட்சியினை கண்டு அதிர்ந்து போய்விட்டனர். இங்கு சாத்தக்குளம் பகுதியில் வசித்துவந்தவர் கீது. இவருக்கு 21 வயது. கல்யாணம் ஆகி துரு என்ற ஒரு வயசு ஆண் குழந்தை உள்ளது.

நிலச்சரிவு

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கீத்துவும், குழந்தையும் உள்ளே இருந்துள்ளனர். அப்போது சரத் தனது அம்மாவுடன் வெளியே இருந்திருக்கிறார். அநத் சமயத்தில்தான் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. "ஓடுங்கள்.. ஓடுங்கள்" என்று சரத் கத்தி கொண்டே ஓடியிருக்கிறார். ஆனால் அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துவிட்டது.

அதிர்ச்சி

இதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, குழந்தை, சரோஜினி, சரத் என குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டனர். ஆனால் சரத் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டார். கடந்த 3 நாட்களாக மண்ணை அகற்றிய நிலையில்தான் கீத்து, குழந்தையின் சடலங்களை மீட்பு படையினர் கண்டனர். ஆனால் கண்ட காட்சியை பார்த்ததுமே அதிர்ச்சியாகி விட்டனர். மகனை மார்போடு அணைத்த நிலையில் கீத்து பிணமாக கிடந்தார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தாய், குழந்தையின் சடலங்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

கதறினர்

கதறினர்

ஆனால் சரோஜினி சடலம் இன்னும் கிடைக்காததால், மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். மனைவி, மகனின் சடலங்களை வெளியே எடுத்ததும், அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு சரத் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையுமே உலுக்கி விட்டது. இதை பார்த்த மீட்பு படையினரும் கண்கலங்கி அழுது விட்டனர்.

சோகம்

சோகம்

சரத்துக்கும் கீத்துவும் வீட்டை எதிர்த்து 2 வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்துள்ளனர். இதனிடையே, குழந்தை பிறந்ததும் கீத்துவை அவரது பெற்றோர் ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டதாக உறவினர்கள் அழுதபடியே சொன்னார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக