திங்கள், 12 ஆகஸ்ட், 2019

காவல் நிலையத்தில் பெண் போலீசை கீழே தள்ளி, கையை கடித்து செல்போனை மீட்ட மாணவி

pnakkheeran.in - jeevathangavel : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி ஜெகதாம்பாள். இவர்கள் வீட்டருகே வசிப்பவர் ராம் அவரது மனைவி புவனேஸ்வரி.  இவர்களது மகள் வாசுகி  கல்லூரியில் படித்து வருகிறார். அருகருகே உள்ள ஆறுமுகம் மற்றும் ராம் குடும்பத்தினருக்கு அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த நிலையில் இன்று காலை இரண்டு குடும்பத்திலும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிப்போய் ஆறுமுகம் மனைவி ஜெகதாம் பாளை  ராம் அடித்துள்ளார்.  இதனால் ஆறுமுகம் குடும்பத்தினர் ராம் மீது பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இரண்டு குடும்பத்தையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்துள்ளனர் போலீசார்.


அப்போது ராமின் மகளான மாணவி வாசுகி,  போலீஸ் நடத்திய விசாரணையை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை கவனித்த போலீசார் காவல்நிலையத்தில் வீடியோ எடுக்க கூடாது எனக் கூறியும் கேட்காமல் வாசுகி தொடர்ந்து வீடியோ எடுக்க, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் ஏட்டு சாந்தகுமாரி என்பவர் மாணவியிடம்  செல்போனை ஆப் பண்ணு இங்க கொடு என கூற,  ’தர முடியாது’ என முரண்டு பிடித்துள்ளார் மாணவி வாசுகி.&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக