வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

விடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. .வீடியோ

Velmurugan P - tamil.oneindia.com :   காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மூலவரான அத்திவரதர் அருள்பாலிக்கும் வைபம் இன்று மாலை இனிதே நிறைவு பெற்றது. 
இதற்காக உழைத்தவர்கள், வந்து தரிசனம் செய்தவர்கள் குறித்து 40 வருடங்களுக்கு பிறகும் வரலாறு பேசுவார்கள். காஞ்சிபுரம் மிக அழகான நகரம். 108 திவ்யதேசங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கோவில்களின் நகரம். புகழ்பெற்ற புனித தலங்கள் நிறைந்த ஊர். இங்கு உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மூலவரான அத்திவரதர் தான் 40 வருடங்களுக்கு ஒருமுறை பொது மக்களுக்கு அருள் பாலிப்பார். 
இந்த விழா கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. முதல் 31 நாள்கள் சயனகோலததில்(படுத்த கோலம்) காட்சி அளித்தார் அத்தி வரதர். 
கடந்த ஆகஸ்ட் 1ம்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். அவரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்தனர். 
இதனால் ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் கடந்த 48 நாளும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்த விழாவில் கடைசி சில நாள்களில் மிகமிக அதிகப்படியான மக்கள் வந்து தரிசனம் செய்தார்கள். இந்த 48 நாளில் சுமார் ஒருகோடி பேர் வரை அத்தி வரதரை தரிசனம் செய்திருப்பார்கள். இவர்களுக்காக கடந்த 48 நாட்களும் இரவு பகல் பாராமல் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் உழைத்தனர். 
இதேபோல் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் ஏராளமான அதிகாரிகளும் விழாவுக்காக கடுமையாக பணியாற்றினார்கள். இதன் காரணமாக இந்த அத்தி வரதர் வைபவம் சீரும்  சிறப்புமாக நடந்தது. 
அத்தி வரதரை 40 வருடங்களுக்கு பிறகு யார் எல்லாம் மீண்டும் பார்க்க போகிறார்களோ அவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளிடம் விழா நிகழ்வுகளை மகிழ்ச்சியாக அசைபோடுவார்கள். இன்றைய நிகழ்வு நாளை நிச்சயம் வரலாறு தான். அத்தி வரதர் வைபவத்துக்காக பணியாற்றிய போலீசார் மற்றும் அதிகாரிகள், அடுத்து 1959ம் ஆண்டு தங்கள் குழந்தை செல்வங்களிடம் நான் இங்கு தான் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டேன் என்று வரலாற்றை இனிமையாக பேசுவார்கள்.. 
அத்தி வரதர் மக்களுக்கு மகிழ்ச்சியையும், நீங்காத அழகிய நினைவுகளையும் கொடுத்துச் சென்றுவிட்டு விடைபெற்றுள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக