வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் போராட்டம்; இந்தியர்களுடன் கைகலப்பு


தினமணி : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தில், அவர்கள் இந்தியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதால் பதற்றம் உண்டானது. அரசியல் சட்டப் பிரிவு 370-ன் வாயிலாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா சமீபத்தில் ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து சட்டங்களை நிறைவேற்றியது. இதற்கு அண்டைநாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சீனாவின் ஆதரவுடன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் செய்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தில், அவர்கள் இந்தியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதால் பதற்றம் உண்டானது.

இந்த விவகாரம் தொடர்பாக போராட்டமம் நடத்த வெள்ளியன்று இந்திய தூதரகம் முன்பாக பாகிஸ்தானியர்கள் சிலர் ஒன்று கூடினர். அவர்கள் கைகளில் இருந்த பதாகைகள் மற்றும் கொடிகளில், 'காஷ்மீர் பற்றி எரிகிறது' , 'சுதந்திர இந்தியா' ஆகிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அப்போது அங்கு வந்த இந்தியர்கள் பாகிஸ்தானியர்களுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. பின்னர் பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக