தினமலர் : புதுடில்லி : காங்., மூத்த தலைவரான மன்மோகன் சிங், அசாம் மாநிலத்தில்
இருந்து, ராஜ்யசபாவுக்கு, தொடர்ந்து, ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடைய பதவிக் காலம், இந்தாண்டு, ஜூன், 14ல் முடிவுக்கு வந்தது. அசாமில்
போதிய பலம் இல்லாததால், அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட முடியவில்லை.
இந்நிலையில், ராஜஸ்தானைச் சேரந்த, பா.ஜ., - எம்.பி.,யாக இருந்த, மதன் லால் சைனி, ஜூன், 24ல் மரணமடைந்தார். அதையடுத்து, காலியாக உள்ள அந்த இடத்துக்கு, தேர்தல் கமிஷன், தேர்தல் அறிவித்துள்ளது. வரும், 26ல் தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு, 15ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ராஜஸ்தானில், காங்., அரசு அமைந்துள்ளதால், இந்த இடத்துக்கான தேர்தலில், அந்தக் கட்சியின் வெற்றி பெறுவது உறுதியாக உள்ளது.
அதனால், அந்த இடத்துக்கு மன்மோகன் சிங் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும், 2024, ஏப்., 3 வரை, இந்த எம்.பி., பதவிக்கான காலம் உள்ளது.
இந்த இடத்துடன், உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியில் இருந்த, முன்னாள் பிரதமரான சந்திரசேகரின் மகன், நீரஜ் சேகர், தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்தார். அதையடுத்து, இந்த இடத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது. உ.பி.,யில் பா.ஜ., அரசு அமைந்துள்ளதால், அந்த இடத்துக்கு, நீரஜ் சேகர் மீண்டும் நிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது</

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக