புதன், 28 ஆகஸ்ட், 2019

“என் உடலையும் தந்தேன் பணமும் தந்தேன்”- ப.சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி வாக்குமூலம்

டிஜிட்டல் திண்ணை:   “என் உடலையும் தந்தேன் பணமும் தந்தேன்”- ப.சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி வாக்குமூலம்
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
”ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இரண்டாவது முறையாக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் கடந்த 26 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் டெல்லி லோதி சாலையில் அமைந்திருக்கும் சிபிஐ தலைமை அலுவலகத்தில் மறுபடியும் விசாரணையை தொடங்கி நடத்திவருகிறார்கள் சிபிஐ அதிகாரிகள்.
சிபிஐ தலைமை அலுவலகத்திலுள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகம், ப.சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்ட 5 ஆம் எண் லாக் அப் சூட் ஆகிய இரு இடங்களிலும் வைத்து சிதம்பரத்திடம் விசாரணை நடத்துகின்றனர் சிபிஐ அதிகாரிகள். ப.சிதம்பரத்தின் கஸ்டடி விசாரணை குறித்து டெல்லி சிபிஐ வட்டாரத்தில் விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தன.
பகல் வேளையாக இருந்தாலும் அந்த அலுவலக அறைகளில் மின்சார விளக்கு இருந்தால்தான் வெளிச்சமாக இருக்கும். இந்த நிலையில் மிகக் குறைந்த அளவு வெளிச்சம் தரும் ஒரு விளக்கு மட்டும் அறையில் எரியவிடப்படுகிறது. இரு அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் எதிரில் உட்கார்ந்திருக்கிறார்கள். ப.சிதம்பரத்திடம் மிக சாவகாசமாக கேள்விகள் கேட்கின்றனர் அதிகாரிகள். அதாவது, ‘உங்க தாத்தா பத்தி சொல்லுங்க’ என்று ஆரம்பித்து செட்டி நாட்டு அரசர்கள் பற்றிய கதையெல்லாம் கேட்கிறார்கள். கொஞ்சம் நேரம் இதைக் கேட்டுவிட்டு ஒரு தண்ணீர் பாட்டிலை மட்டும் ப.சி முன் வைத்து விட்டு அந்த அதிகாரிகள் இருவரும் சென்றுவிடுகிறார்கள். மெல்லிய வெளிச்சம், தன்னைத் தவிர யாருமற்ற அறை. ஒரே ஒரு தண்ணீர் பாட்டில். இந்த சூழலில் சுமார் 5 மணி நேரம் தனியாக சிதம்பரத்தை விட்டுவிடுகிறார்கள்.

அதன் பிறகு சில அதிகாரிகள் உள்ளே செல்கிறார்கள். ஐ.என்.எக்ஸ். வழக்கு பற்றி விசாரிக்கத் தொடங்குகிறார்கள். இந்திராணி முகர்ஜியை முதன் முதலில் எங்கே சந்தித்தீர்கள் என்ற கேள்வியில் ஆரம்பித்து இந்திராணி பற்றியே தொடர்ந்து சிதம்பரத்திடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஒரு இருபது நிமிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவ்வளவுதான். மீண்டும் அந்த மங்கலான விளக்கு... 5 முதல் 6 மணி நேர தனிமையில் விடப்படுகிறார் சிதம்பரம். இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது விசாரணை.
சிதம்பரம் புத்தி சாதுர்யம் மிக்கவர், தெளிவான தர்க்கவாதி, ஆங்கிலப் புலமை மிக்கவர். அவரை இயல்பான மனநிலையில் வைத்திருந்து கேள்விகள் கேட்டால், விசாரணை அதிகாரிகளையே விதிர்விதிர்க்க வைத்துவிடுவார். அதேநேரம், 73 வயதான சிதம்பரத்தை தொடர்ந்து சில மணி நேரங்கள் தனிமையில் தவிக்க விடுவதன் மூலம் அவரை மனதளவில் சோர்வாக்கி அப்போது விசாரணை நடத்தினால்தான் உண்மைகளைக் கூறுவார் என்பதால்தான் இந்த உத்தியைப் பின்பற்றுவதாக விசாரணை அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிபிஐ வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

இதற்கிடையில் ட்விட்டரில் கௌரவ் பிரதான் என்பவர் ஆகஸ்டு 23 ஆம் தேதியே வெளியிட்ட பதிவுகள் கடந்த சில நாட்களாக டெல்லி ஊடக உலகிலும், அரசியல், வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கவுரவ் பிரதானை பிரதமர் மோடி முதல் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரை ஏராளமான பாஜகவினர் ட்விட்டரில் ஃபாலோ செய்து வருகிறார்கள். பிரதமர் மோடியே ஒருவரை ட்விட்டரில் ஃபாலோ செய்கிறார் என்பதால் அவரது கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
23 ஆம் தேதி பிரதான் தனது ட்விட்டரில், ”இந்திராணி சிபிஐயிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ’ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுத்ததோடு என் உடலையும் பலமுறை சிதம்பரத்துக்காக கொடுத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
இதுமட்டுமல்ல சிதம்பரத்துக்கு நெருக்கமான பெண் பத்திரிகையாளர்கள் என்று பெரும் பட்டியலையே வெளியிட்டிருக்கிறார் பிரதான். இதே நேரம் பிரதான் இணைய தளங்களில் இதுவரை பல போலி செய்திகளை பரவ விட்டிருக்கிறவர் என்று அவரது ஒவ்வொரு போலிச் செய்தியையும் புட்டுப் புட்டு வைத்து ஆல்ட் நியூஸ்.காம் என்ற இணைய தளத்தில் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார் பூஜா சௌத்ரி என்ற பத்திரிகையாளர்.

 கவுரவ் பிரதானின் போலிச் செய்திகள் வரிசையில் சிதம்பரம் பற்றிய இந்த ட்விட் பதிவுகளும் அடங்குமா என்று டெல்லியில் பல்வேறு பத்திரிகையாளர்களிடம் விசாரித்ததில் பிரதானின் இந்தப் பதிவுக்குப் பின்னால் சிபிஐ இருக்கும் என்கிறார்கள். மேலும், ‘இந்திராணி முகர்ஜியிடம் ப.சிதம்பரத்துக்கு எதிரான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டுதான் சிதம்பரத்தைக் கைது செய்திருக்கிறார்கள். ஐ.என்.எக்ஸ். விவகாரத்தில் ஊழல் என்பதைத் தாண்டி பாலியல் சங்கதிகளும் இருக்கின்றன.

 இந்திராணி மூலமாகவே ப.சிதம்பரத்துக்கு எதிரான பாலியல் வாக்குமூலங்களை சிபிஐ பெற்றிருக்கிறது. மத்திய அரசு ப.சிதம்பரத்தை திட்டமிட்டு அவமானப் படுத்துகிறது என்று சிதம்பரம் குடும்பத்தினர் கூறியதன் பின்னால் இந்த பாலியல் விவகாரம்தான் இருக்கிறது.

ப.சிதம்பரம் பற்றிய பல சங்கதிகளை இந்திராணி முகர்ஜி மூலமாக சேகரித்துக் கொண்ட சிபிஐ, அடுத்து சிதம்பரத்தையும் இந்திராணி முகர்ஜியையும் நேருக்கு நேர் உட்கார வைத்து இந்திராணி முகர்ஜி சிதம்பரத்துடன் பண ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் உள்ள தொடர்புகள் பற்றி சொல்லும் சம்பவங்களுக்கு ப.சிதம்பரத்தின் பதிலைக் கேட்டுப் பெற திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ப.சிதம்பரத்துக்கு பெரும் நெருக்கடி உருவாகும்’ என்கிறார்கள்” என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக