புதன், 28 ஆகஸ்ட், 2019

ராகுல் காந்தி பேட்டியால் ஐநாவில் இந்தியாவுக்கு சிக்கலா? பாகிஸ்தானின் தந்திரம்.. பாஜக ஆவேசம்


tamil.oneindia.com - veerakumaran : டெல்லி: ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, தனது கருத்துக்களால் ராகுல் காந்தி நாட்டை அவமானப்படுத்திவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
 மற்றும் #RahulBacksPakistan என்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்ட்டாகிக் கொண்டு உள்ளன.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான கருத்துக்காக, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
"ராகுல் காந்தி இன்று காஷ்மீர் ஒரு உள் விஷயம் என்றும், வன்முறை பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஒரு முழுமையான யு-டர்ன், ஏன்? தேசம் கோபமடைந்ததால், அவர்கள் அவரை விரும்பினர்" என்று ஜவடேகர் கூறினார். சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த ராகுல் காந்தி சென்றார். அவருடம் திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி குழுவினரும் சென்றனர்.
ஆனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவர்கள் அனைவரும் தடுக்கப்பட்டு டெல்லி திருப்பியனுப்பப்பட்டனர்.


இது தொடர்பாக, டெல்லியில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீரில் நிலைமை சரியில்லை என்பதற்கு, அரசின் இந்த நடவடிக்கை ஒரு நல்ல ஆதாரம் என்று கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் அமைச்சர் சிரீன் மசாரி, ராகுல் காந்தியின் கருத்தை, குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதியிருந்தார். காஷ்மீர் விஷயத்தில் தலையிட அவர் கோரிக்கைவிடுத்தார். இதனால் ராகுல் காந்தி பேட்டி பற்றி சர்ச்சை எழுந்தது. இதற்கு விளக்கம் அளிப்பது போல ராகுல் காந்தி இன்று காலை ஒரு ட்வீட் வெளியிட்டார்.

அதில், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. ஜம்மு-காஷ்மீரில் வன்முறை பாகிஸ்தானால் தூண்டப்படுகிறது. இவ்வாறு தெரிவித்திருந்தார்.>இந்த நிலையில், பிரகாஷ் ஜவடேக்கர் அளித்த பேட்டி:
ஜம்மு-காஷ்மீரில் எல்லாமே, தவறாக நடந்து கொண்டிருப்பதாக ராகுல் காந்தி கூறினார், நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் ராகுல் காந்தி. காஷ்மீரில் எல்லாம் நன்றாக உள்ளன, நீங்கள் நினைத்தபடி எந்த வன்முறையும் இல்லை. மக்கள் இறக்கவில்லை. பாகிஸ்தான் உங்கள் கருத்துக்களைப் பயன்படுத்தியுள்ளது.

ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் கோரிக்கையில், ராகுல் காந்தி கூறிய கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்களை ராகுல் காந்தி போன்ற பிரதான கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார் என்று பாகிஸ்தான் அளித்த கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.>இதனிடையே, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இன்று அளித்த பேட்டி:

ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு பாகிஸ்தான் அரசு அனுப்பியதாகக் கூறப்படும் ஒரு மனுவினால் ராகுல் காந்தியை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. தங்கள் தரப்பு அநியாயங்களுக்கு நியாயம் கற்பிக்க பாகிஸ்தான் இவ்வாறு இந்திய தலைவர்கள் கருத்துக்களை வைத்து அடைக்கலம் தேடுகிறது. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது அரசியல் சமநிலையை இழந்துவிட்டார். இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக