புதன், 28 ஆகஸ்ட், 2019

ஒரு பாடலுக்கு ஆட ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய இந்தி... சிங்கள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்


 மாலைமலர் : இந்தி படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஒரு பாடலுக்கு நடனம் ஆட ரூ.2 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். ஒரு பாடலுக்கு ஆட ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகை ஜாக்குலின் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவரை ஒரு பாடலில் நடிக்க பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்திற்காக கேட்டு இருக்கிறார்கள். இந்த பாடலில் படுகவர்ச்சியாக ஜாக்குலின் நடிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.
இதற்கு சம்மதிக்க ஜாக்குலின் பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். சாஹோவில் பிரபாசுடன் பேட் பாய் எனத்தொடங்கும் பாடலில் ஜாக்குலின் நடித்திருக்கிறார். இந்த பாடல் காட்சிக்காக அவருக்கு ரூ.2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. பிரபாஸ், ஜாக்குலின் இந்தி சினிமா வியாபாரத்தை குறி வைத்தே இதில் ஒரு பாடலுக்கு ஜாக்குலினை நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக