புதன், 28 ஆகஸ்ட், 2019

திருமாவளவனின் லண்டன் கூட்டத்தில் நடந்ததென்ன? சமுகவலையில் காரசார அலசல் ..

பல ஆண்டுகளுக்கு முன்பு பாடகர் யேசுதாஸ் ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு அழைக்கப்பட்டார் . அப்போது இந்தியாவில் இருந்து அதிகம் வர தொடங்காத காலம் .
அவர் பாட தொடங்கியதும் ஒரே கூச்சல் குழப்பம் ..என்ன காரணம் என்றே எவருக்கும் விளங்கவில்லை ..யேசுதாசை பாடவே விடவில்லை . தமிழ் மலையாள இந்தி பாடலகள என்று எதையுமே அந்த கூட்டம் உருப்படியாக பாடவிடவில்லை .
மண்டபமோ எக்கச்சகாமன் கூட்டம் நிரம்பி வழிந்தது .
ஏன் கூச்சல் போடுகிறீர்கள் என்று யேசுதாஸ் மீண்டும் மீண்டும் கத்தி பார்த்தார் .. புலம்ஸ்ஸின் கூச்சல் அடங்கவே இல்லை
ஏதோவொரு வழியாக கூச்சல் போட்ட புலம்ஸ் சந்தோஷமாக டிக்கெட் வாங்கிய காசுக்கு சந்தோஷமாக கூச்சல் போட்டோம் என்ற திருப்பதியில் மகிழ்ச்சியாக வீடு திரும்பியது.
சுளையாக பெரும் பணத்தை பெற்றாலும் இப்படி கூச்சல் போட்டு ஒரு பாட்டை கூட உருப்படியாக பாட விடவில்லையே இந்த புலம்ஸ் என்ற கவலையில் முகத்தை தொங்க போட்டுகொண்டு மண்டபத்தை விட்டு அகன்றார் தாசண்ணா.
தமிழ் தேசியத்தால் மூளை சலவை செய்யப்பட்ட கூட்டம் " நெல்லின் மணிகள் இல்லாத வெறும் பதர்கள்" போல உருவாகி இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது இப்படி ஒரு வெறி கூட்டத்தை சீமான் கட்டமைத்து வருகிறார்.

என்னதான் அறிவு வளர்ச்சி அடைந்த நாட்டுக்கு சென்றாலும் இந்த மாடுகளுக்கு செக் என்ன சிவலிங்கம் என்ன் ?
பேராசிரயர் சுபவீரபாண்டியனின் பேச்சின் பெறுமதியோ அண்ணன் திருமாவளவன் பேச்சின் சாரமோ புரியும் அளவுக்கு இந்த வெறி கூட்டத்திற்கு கிடையாது
இவர்களுக்கு தமிழகத்தின் ஆளுமைகளை எல்லாம் தரம் தாழ்த்தி புலம் பெயர் தமிழர்களுக்கு அரசியல் பாடம் எடுப்பது சீமான் நெடுமாறன் மணியரசன் திருமுருகன் காண்டி போன்றோர்தான்.
இவர்களை இனம் காண தவறினால் தமிழகத்திலும் இது போன்ற ஒரு பதர் கூட்டம் ஒன்று உருவாக்கி விடும்
Villa Anandaram : இவர்கள் யாரும் தமிழ்நாட்டு தமிழரை நம்பி வெளிநாடு வருவதில்லை. இலங்கை புலம்பெயர் தமிழரை எதிர்பார்த்தே தமிழ்நாட்டு கலைஞரும் சரி அரசியல்வாதிகளும் சரி வருகிறார்கள். இவர்களை வைத்து தாமும் ஏதாவது சுறுட்டும் இலங்கை தமிழரும், மற்றும் மண்டைக்குள் ஏதும் இல்லாத புலம்பெயர் இலங்கை தமிழரும் தமக்குள்ளே அடிபட்டு சாவதானால் சாகட்டும். கலைஞ்ர்களை எந்த நாட்டாயினும் மதிக்கலாம். ஆனால் அவர்கள் கூட இங்கே வந்து எமக்கு புத்தி சொல்ல பார்க்கிறார்கள். கிடைக்கும் பணத்திற்க்கு ஆடியோ பாடியோ மகிழ்விக்க வேண்டியது தானே. இலங்கை அரசியல் பேசும் இந்திய அரசியல் வாதிகளை செருப்பால் அடித்து துரத்த வேணும்.

Radha Manohar : தங்களின் செருப்பால் என்ற வார்த்தைக்கும் அந்த படிக்காத தற்குறி கூச்சல் பதர்களுக்கும் என்ன வித்தியாசம் ? இதுதான் யாழ்மையவாதிகளின் அடாவடித்தனம் என்பது ..இதில் தங்களுக்கு ஒரு அடிஷனலாக இடதுசாரி போர்வை வேறு.

Villa Anandaram : வழக்கமான முட்டாள்தனமானவாதம். இதில் யாழ்மையவாதம் எங்கே வந்தது. அந்த படிக்காத கும்பலுக்கும் உங்களுக்கும் தான் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இங்கே எம்மை என்பது உங்கள் பார்வையில் யாழ்மையவாதம் என்றால் உங்களுக்கு நிறைய அரசியல் கற்றக வேண்டி உள்ளது. அங்கே எதிர்க்கும் கூட்டமும் ஆதரவுதரும் கூட்டமும் என்னை பொறுத்தவரை ஒரே கும்பலே. எம்மை வைத்து பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் வாதிகளை செருப்பால் அடிக்காவிட்டால் விளக்கு மாற்றால் அடியுங்கள். ஒட்டுண்ணிகளை(parasites ) வேறு என்ன செய்வது? இடதுசாரிகள் இவர்களை யாரென்றும் மதிக்கமாட்டார்கள்..

Villa Anandaram Radha Manohar யார் இந்த கும்பல்?

Radha Manohar Radha Manohar : இந்த பதிவை நண்பர்களின் கவனதிற்கு கொண்டுவருவது நல்லதுதானே? பதிவர்களை ஏன் கும்பல் என்கிறீர்கள் ? கருத்து பரிமாற்றம் என்றாலே ஏனிந்த வெறுப்பு?

Villa Anandaram : அதுதானே, கருத்து பரிமாற்றம் என்றாலே ஏனிந்த வெறுப்பு? மாற்றுகருத்தை கண்டதும் யாழ்மையவாதம், இடதுசாரீயம் என்று புலம்ப வெளிக்கிட்டீர்களே? போட்ட பதிவிற்கு மட்டும் பதில் சொல்வதுதான் கருத்து பரிமாற்றம்..

Radha Manohar : தங்களின் செருப்பால் அடித்து துரத்த வேண்டும் என்பது என்னவிதமான கருத்து பரிமாற்ற இலக்கணமோ?

Villa Anandaram : எம்மை வைத்து பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் வாதிகளை செருப்பால் அடிக்காவிட்டால் விளக்கு மாற்றால் அடியுங்கள். ஒட்டுண்ணிகளை(parasites ) வேறு என்ன செய்வது?


தமிழ் மறவன் :  ஒரு விடயத்தை மிகத் துல்லியமாக உற்று நோக்குங்கள்!

அயல் தேசங்களில் வாழும் புலம் பெயர் தமிழர்களிடத்தில் பேசப் போகும் தமிழகத்து தலைவர்களின் நிகழ்ச்சிகளில் திட்டமிட்டு நடத்தப்படும் குழப்பங்கள்!

யார் இதைச் செய்வது?
வேறு யார்.., புலம்பெயர் தமிழர்களின் பணத்தால் பிழைப்பை நடத்துகிற சீமானின் கும்பல்தான்!

அவர்கள் ஏன் தமிழகத்திலிருந்து யார் சென்றாலும் பதறுகிறார்கள்?

ஓர் கட்சியை நடத்த பணம், படை இரண்டும் தேவை!

நாம் தமிழர் கட்சிக்கு தமிழகத்தை பொறுத்தவரை படை பலம் காட்ட, முழக்கம் போட சில விசிலடிச்சான் குஞ்சுகள் இங்குண்டு!

ஆனால், அவர்களால் குறிப்பிடும்படியான வருமானமெல்லாம் கிட்டாது.

தமிழகத்தில் உள்ள மக்களுக்கு சீமானின் உண்மை முகம் தெரிந்து போனதும் ஓர் காரணம்!

அயல் தேசங்களிலுள்ள ஈழத் தமிழர்களிடத்தில் இருந்து மட்டுமே வந்து கொண்டிருக்கிற பலகோடி வருமானம்தான் சீமானுக்கு ஒரே பிழைப்பு!

இந்நிலையில், அங்கு அறிவார்ந்த தலைவர்கள் போய் பேசுவதால், அம்மக்கள் தெளிவடைந்து விடப் போகிறார்கள் என அஞ்சுகிறார் சீமான்!

அயல்நாடுகளில் ஏற்பாடு செய்யப்படுகிற நிகழ்ச்சிகளில் இப்படி பிரச்சினைகளை தொடர்ந்து ஏற்படுத்தினால் தமிழகத் தலைவர்களை அழைக்க தயங்குவார்கள்!
என திட்டமிட்டு அங்கிருக்கும் தன் ஆதரவாளர்களை வைத்து குழப்பங்களை ஏற்படுத்துவதே சீமான்தான்!

அது சரி!
புலம்பெயர் தமிழர்களிடத்தில் அறிவார்ந்த அரசியலை முன் வைத்துவிட்டால், சீமானின் நிலை என்னாகும் எனக் கேட்பீர்கள்!

அப்போதும் சீமானுக்கு நட்டமில்லை!
எப்படி?
புலம்பெயர் தமிழர்களை மட்டுமே நம்பியிருந்த சீமான் தற்போது இந்துத்வா குருமூர்த்திகளுக்கு முன்னேற்பாடாக அடி போட்டுத்தான் வைத்திருக்கிறார்!

ஏமாற்றித்தான் பிழைக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டவன், வழியே இல்லை எனில் "பெற்ற தாயின் கருப்பையை கூட களவாட" தயங்க மாட்டான்!

என்று திருந்துமோ அயல் தேசத்து புலம்பெயர் ஈழத்தமிழர்களில் சிலக்கூட்டம்???

- மு.தமிழ் மறவன்.
Radha Manohar : தமிழ் மறவன் தங்களின் இந்த பதிவுக்கு எனது உளப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .. மிகவும் சரியாக கணித்து பதில் கூறியுள்ளீர்கள.

Villa Anandaram : இதுவெல்லாம் சரியான கணிப்பாம். //புலம்பெயர் தமிழர்களிடத்தில் அறிவார்ந்த அரசியலை முன் வைத்துவிட்டால்// அதை நாம் செய்கிறோம். செய்ய முயலுகிறோம். அதை செய்ய எமக்கு தமிழ்நாட்டில் இருந்து பிழைப்புவாத அரசியல்வாதிகள் வரவேண்டியதில்லை.
 எமக்கு சீமானும் அந்நியன், வை.கோ, திருமா எல்லோரும் அந்நியரே. முதலில் இந்த இந்திய மேன்மைதன மனப்பாங்கை (superior attitude) ஒழிக்கவேணும். அதுதான் அறிவார்ந்த அரசியல். சீமானுக்கு புலம்பெயர் தமிழரிடையே இருக்கும் ஆதரவு மிக கம்மி. அதுவும் யாரும் பொருள் உதவி செய்யும் அளவிற்கு முட்டாள்கள் இல்லை.
அவனுக்கு இருக்கும்(இருப்பதாக காட்டப்படும்) ஆதரவு முன்னால் புலிகள் என்று சொல்லப்படுபவரால் சுருட்டப்பட்ட பணத்தை பதுக்க முற்படும் குழுக்களால் அவிழ்கப்படும் பிரசாரமே. இந்த சுருட்டிய பணமும் அந்த முதலீடுகளால் வரும் லாபமுமே இனி சீமான் கூட்டத்திற்கு வரும்படி. அதில் தமக்கும் ஏதும் பங்கு வராதா என்று திருமாவும், வை.கோ வும் போட்டி போட்டால் அது அவர்கள் நாட்டு அரசியல். எமதல்ல..

Kalai Selvi : சீமானோடு ஒரே நேர் கோட்டில் வைகோ வையும், திருமாவையும் அளக்கிற இவரின் அறிவின் எல்லையை நினைத்தால் __ அட டா!


Villa Anandaram : மூவரும் புலிகள் பெயரை சொல்லி இலங்கை தமிழரை சாட்டி அரசியல் செய்பவர்கள். மற்றய இருவர் போலவே இவரும் இலங்கை தமிழரிடம் கையேந்த வந்துள்ளார். அதற்க்கு பிரபாகரன் புராணம் வேறு. இவை எல்லாம் ஒரே கோட்டில் இல்லாமல் வேறென்ன. இதை புரிந்து கொள்ளாத‌ உங்கள் அறிவின் எல்லையை நினைத்தால் __ அட டா.😂 சீமான், வைகோ, திருமா மூவருக்கும் உள்ள‌ வேறுபாடு அது உங்கள் நாட்டு அரசியல். உங்கள் நாட்டிற்கும் இலங்கைக்கும் சமூக ரீதியாக அரசியல் ரீதியாக பாரிய வேறுபாடு உண்டு. அந்த புரிதலே இவருக்கும் இல்லை மற்றய இரண்டு கோமாளிகளுக்கும் இல்லை..

Kalai Selvi : இம்மாதிரி நாக்கில் நரம் பில்லாமல் மூளை ஊனமுற்ற கருத்துக் குருடர்களான இலங்கை ஈழ தமிழருக்காக தங்களின் இளமைகளை வாழ்க்கையை பொன்னும் பொருளை சொத்துக்களை உயிரை இழந்த இன்னமும் நடைபிணங்களாக உலா வரும், சிறையில் வாடிக் கொண்டுள்ள சகலமும்இழந்த தமிழக கருநாடக தமிழர்களை நினைத்தால் தான் நெஞ்சம் சுக்கு நூறாக உடைந்து விழுகிறது ஈழ அகதிகளைப் பற்றியும் கவலைப் படாமல் இருக்கும் புலம் பெயர் ஈழத்து மக்களை நினைத்து நம்மை நாம் எப்படி எடை போட வேண் ம் என்று கற்க வேண்டும், காலத்தின் கொடுமை.

Villa Anandaram : இந்த அரசியல்வாதிகள் அப்படி எதையும் இழக்கவில்லை. தியாகிகள் வேறு, இந்த ஒட்டுண்ணிகள் வேறு. இவர்கள் இங்கே வருவது நக்கி பிழைக்க. அது தெரியாத மூளை ஊனமுற்ற கருத்துக் குருடர்களாக நாம் இல்லை.

Radha Manohar : இதுதான் யாழ்ப்பாண மையவாத சிந்தனை ..இவர்களுக்கு எவரும் நண்பர்கள் இல்லை . சிங்களவன் அடிக்கிறான் என்பார்கள் ஆனால்  வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மலையக தமிழரை தோட்டக்காட்டான் என்று கேவலமாக நடத்துவார்கள் .
அது மட்டுமல்ல அவன் வன்னியான் அவன் மட்டக்களப்பான் அவன் சோனி அவன் அந்த ஊரான் இவன் இந்த ஊரான் அவன் அந்த சாதி இவன் இந்த் சாதி என்று சதா தங்களின் அகம்பவத்தை மட்டுமே முன்னிறுத்தி அடாவடி செய்யும் அசல் சீமான்தனம்தான் யாழ்ப்பாண மையவாதம் என்பது.

இவர்களில் படித்தவர் படிக்காதவர் பேதம் இல்லாமல் எல்லோரும் சீமானின் காணொளிகளை பார்ப்பார்கள்.இவர்களின் உளவியலுக்கு அது பொருந்தி வருகிறது ..
ஆனால் அதைக்கூட வெளிப்படையாக ஒப்பு கொள்ளமாட்டார்கள் . அந்த நேர்மையும் கிடையாது .
சீமானை கூட இவர்கள் மதிப்பதில்லை.
இவர்கள் பிரபாகரனை பார்த்து பயந்தார்கள் ஆதரித்தார்கள் .
எம்ஜியாரையும் ஜெயலலிதாவையும் தங்களை விட உயர்ந்த பிறவியாக (வெள்ளை தோல்) கருதினார்கள் ஆதரித்தார்கள்.. .மிகப்பெரும் உளவியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ..

Villa Anandaram : அருமையாக எழுதி உள்ளீர் உம்மை பற்றி. உமக்கிருக்கும் மிகப்பெரும் உளவியல் நோயிற்கு ஏதாவது மருதுவரை பாரும். அரசியலில் அதற்க்கு சிகிச்சை இல்லை. சரி விஷயத்திற்கு வருவோம். நான் மேலே எழுதியதில் ஏதாவது புரிந்ததா? புரிந்தால் அதற்கு மட்டும் பதில் தாரும்.

Kanagaraj Asirvatham ஈழப்போருக்கு  முன்னும்.போருக்கு பின்பும்.தங்களுக்கான. ஆத்மார்த்தமான.தலைவனை.அடையாளம்காணத்தெரியவில்லை

 Durai Ilamurugu ஈழத் தமிழர்களுக்கு ஒரு காலத்தில் இந்தியாவின் தயவு.மருந்து மருத்துவம்.ஆயுதம் ஒளிந்து கொள்ள இடம் இவை எல்லாம் தேவைப்பட்டது.அப்பொழுது இந்திய அரசியல் வாதிகள் ஒட்டுண்ணிகளாகத் தெரியவில்லை. இன்று எல்லாம் முடிந்து விட்டது.தன் தலைவன் இறந்து விட்டான் என்று வெளியே சொல்லி அழமுடியாத கூட்டம் இன்று தமிழ் நாட்டின் அரசியலில் நடந்து வருகிற மாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் கத்தி கதறுகிறது.உன்மத்தம் பிடித்து நண்பர்கள் பகைவர்கள் என்று வேறு பாடின்றி குலைக்கிறது.பைத்தியக்காரன் பத்தும் செய்வான்.போகட்டும் விட்டு விடு என்று ஒரு திரைப்பட பாடல் உண்டு.அதை மனதில் கொள்ள வேண்டும்.

Durai Ilamurugu எடப்பாடி லண்டன் வருகிறது.ஈழத்தமிழர் என்ன செய்ய போகிறார்கள் என்று காண ஆவல்.

Durai Ilamurugu   : செயலலிதாவும் இல்லை.மகோராவும் இல்லை.திட்டுவதற்கு கலைஞர் கூட உயிருடன் இல்லை.பாவம் என்ன தான் செய்வார்கள்.

Villa Anandaram   :  //ஈழப்போருக்குமுன்னும், போருக்குபின்பும்.// முதலில் ஈழம் என்ற வார்த்தையே தப்பு. அப்படி எந்த நாடும் இலங்கையில் கிடையாது. அது ஒரு யாழ்மையவாத கூட்டம் உருவாக்கிய கோஷம் மட்டுமே. அப்படியே ஈழம்/இலங்கை தமிழர் என்று சொன்னாலும் அவர்களுக்கு ஆத்மார்த்தமான தலைவனை தமிழ்நாட்டிலா இனம் காணவேணும்? அப்படி எண்ணிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு உதிரி தலைமைகள் போன்ற கோமாளிகள் எந்த சர்வதேச அரசியலிலும் கிடையாது.

Villa Anandaram :  இற்கு போட்ட பதிலை பார்க்கவும். //இலங்கை தமிழர்களுக்கு ஒரு காலத்தில் இந்தியாவின் தயவு.மருந்து மருத்துவம்.ஆயுதம் ஒளிந்து கொள்ள இடம் இவை எல்லாம் தேவைப்பட்டது.// அப்போதும் இப்போதும் இலங்கை தமிழரை இந்தியா அரசும் தமிழ் நாடும் தம‌து அரசியல் நலனுக்காக உபயோகித்தது என்பது தான் உண்மை. அந்த உபயோகிப்பால்தான் இலங்கை தமிழர் உரிமை போராட்டம் பயங்கரவாதமாக மாறியதும் பின் இந்தியாவே தனது தேவை முடிந்ததும் அந்த உரிமையை நசுக்கியதும் வரலாறு. அந்த இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்டே தமிழ்நாட்டு பெரும் கட்சி அரசியல் வாதிகளும் சரி உதிரி கட்சி அரசியல்வாதி களும் சரி இயங்குகிறார்கள். இவர்களால் இலங்கையில் வாழும் தமிழருக்கு எந்த நன்மையும் கிடையாது. இவர்கள் செய்யும் பொறுப்பற்ற சந்தர்ப்பவாத அரசியலால் இலங்கையில் உள்ள சிங்கள பேரினவாதத்திற்கு வலு சேர்ப்பதே யதார்த்தம். இந்த குற்றச்சாட்டை உணர்வு பூர்வமாக இலங்கைதமிழர் மீது அன்பு பாராட்டி உதவிய தமிழ் நாட்டு பொதுமக்களுக்கு எதிராக வைக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறேன். உங்கள் நாடு வேறு, உங்கள் அரசியல் வேறு, உங்கள் சமூக அமைப்பே வேறு. இலங்கை த‌மிழர் அரசியல், சமூக அமைப்பு பர்றிய உங்கள் நாட்டு அரசியல் வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த அறிவும் இல்லை. இலங்கைதமிழர் வாழ்க்கையை தாம் தான் தீர்மானிபதாக நினைக்கும் இந்திய கும்பலை பைத்தியக்காரன் பத்தும் செய்வான் என்று கடந்து போகவேண்டியதுதான். யாரப்பா நீங்கள்? உங்களால் உங்கள் நாட்டு அரசியலையே சீர் செய்ய முடியவில்லை. சாதிக்கொரு கட்சி வடநாட்டான் தென்நாட்டான் இந்து, முஸ்லீம், மாடு தின்னாதே பன்றி தின்னாதே, சினிமாகாரனுக்கு பாலாபிஷேகம், ஹிந்தியா, தமிழா, சமஸ்கிருதமா என்று சர்ச்சை. உங்களால் எமக்கு அரசியல் ரீதியாக என்ன செய்ய முடியும்? சமூகரீதியாக எப்படி வழிகாட்ட முடியும்? //தமிழ் நாட்டின் அரசியலில் நடந்து வருகிற மாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் கத்தி கதறுகிறது.// உங்கள் நாட்டில் நடக்கும் மாறுதல்களை பாத்து நாம் ஏன் அஞ்சவேணும். ஒரு வளராத வளரவே முடியாத பிற்போக்குவாத தற்பெருமை பேசும் மக்கள் கூட்டம்தான் தமிழ்நாடு. இப்போ நாம் கவனிக்க வேண்டியது உலக அரசியலை. முதலில் இந்த சுய தம்பட்ட நினைப்பை விட்டு வெளியே வாருங்கள். //தன் தலைவன் இறந்து விட்டான் என்று வெளியே சொல்லி அழமுடியாத கூட்டம் // ஏன் அழவேண்டும். பலர் வெடிகொளுத்தி மகிழவும் செய்தார்கள். அந்த தலைவனே இந்தியாவின் தயாரிப்பு. இப்போதும் அந்த தலைவன் உயிருடனிருகின்றான் என்று சொல்லி சுயநல அரசியல் செய்யும் தமிழ்நாட்டு மலிவான அரசியல் வாதிகள். //எடப்பாடி லண்டன் வருகிறது.ஈழத்தமிழர் என்ன செய்ய போகிறார்கள்// யாரப்பா ஏடப்பாடி? உங்களை போன்ற முட்டாள்களால் தான் அப்படி ஒருவனை முதலமைசராக்க முடியும். முதலில் உங்கள் சுய தம்பட்டம், அதனால் கொள்ளும் சுய இனபத்தை தவிருங்கள். நாம் ஏன் உங்கள் நாட்டின் கையாலாகாத அரசியல் தலைவர்களை ஊழல் அரசியல்வாதிகளை கவனிக்க வேணும்? இலங்கை போரில் அகதிகளாக இலங்கைதமிழன் உலகெங்கும் போனான். அதில் இந்தியாவில், தமிழ்நாட்டில் தான் அவன் எந்த உரிமையும் இல்லாமல் தவிக்கிறான். மற்ற நாடுகள் அவர்களை மனிதராக ஏற்றுக்கொண்டு வாழ வழி செய்தது. இப்போ தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அந்த தமிழரிடம் கையேந்த வெளிநாடுகளுக்கு படையெடுக்கிறார்கள். இதுதான் உண்மை.

Durai Ilamurugu உங்கள் வாதம் இந்தியா தான் சீலங்கா வாழ் தமிழர்களை தமிழ் நாட்டிற்கு வரவழைத்து ஆயுதம் கொடுத்து போர் செய்ய சொன்னதா சிங்கள பேரினவாதம் எதிர் சீலங்கா வாழ் தமிழர்கள் என்ற முரண் எப்படி தோன்றியது? இதில் மலையகத் தமிழர் நிலை என்ன?வை கோ பற்றி பேசும் நீங்கள் நெடுமாறன் மணியரசன் என்ற தமிழ் தேசிய வியாபாரிகள் பற்றி பேசவில்லையே ஏன்?

Durai Ilamurugu எப்படி இருந்தாலும் லண்டன் நகருக்கு அமைப்பின் அழைப்பில் வந்த தலைவர்களை ரகளை செய்து வெளியே தள்ள என்ன உரிமை இருக்கிறது?

Durai Ilamurugu எடப்பாடி குறித்து ஒன்றும் கூறவில்லை யே ஏன்

Villa Anandaram :   உங்களுக்கு இலங்கை போர்வரலாறு தெரியவில்லை போலிருக்கு. இந்திராகாந்தி தான் இலங்கை போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்தார். அதற்கு முன்னரே வல்வெட்டி துறையை சார்ந்தவர்கள் இந்தியாவில் ஒருகுடும்பம் இலங்கையில் ஒரு குடும்பம் என்றுதான்வாழ்ந்தார்கள் அதைதான் பிரபாகரன் உபயோகபடுத்திக் கொண்டார். பெரும்பாலான இலங்கைதமிழர் தனி ஈழம் பிரிவதை அன்றும் இன்ன்ரும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. பிரிவினை யதார்தமும் இல்லை. அதை மூடி மறைத்து பிரபாகரனின் போஸ்டர் ஒட்டி தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் பிழைக்கின்றார்கள். முடியுமானால் கச்சைதீவை இலங்கையிடமிருந்து மீட்டு எடுக்க சொல்லுங்கள். இந்திய /தமிழ்நாட்டு மீனவருக்கு அது முக்கியம். தமிழ்நாட்டு மீனவர் உயிரையே பாதுகாக்க முடியாதவர்கள் இலங்கை தமிழருக்கா உதவ போகிறார்கள்? உங்கள் நாட்டு ஊழல், ஏமாற்று, உணர்ச்சி அரசியல் செய்பவர்கள் பெயரை எல்லாம் இங்கே நெடுமாறன், மணியரசன் என பட்டியல் போட என்னால் முடியாது. அவர்கள் எமக்கு முக்கியமானவர்கள் இல்லை என்பதானால் அது தேவையும் அல்ல. புலம்பெயர்ந்தவரிடம் பிரபாகரன் ஈழத்தமிழர் உரிமை என்று சொல்லி உண்டியல் குலுக்க முயல்பவரை தான் இங்கே விமர்சிக்கிறோம். உங்கள் நாட்டு அரசியல் தலைவர்களை விமர்சிப்பதும் நிராகரிப்பதும் உங்கள் வேலை. ஏடப்பாடி பற்றி மேலே குறிப்பிடேன். அது புரியவில்லையா? அல்லது வாசிக்காமலே கேள்வியா? //லண்டன் நகருக்கு அமைப்பின் அழைப்பில் வந்த தலைவர்களை ரகளை செய்து வெளியே தள்ள என்ன உரிமை இருக்கிறது?// இது நியாயமான கேள்வி. இதற்கு நான் முதலில் போட்ட பதிவை பார்க்கவும். நான் அதை நியாயப்படுத்தவில்லை. இங்கே கூச்சல் போட்டவர்கள் உங்கள் தமிழ்நாட்டால் வளர்த்து விடப்பட்ட ரௌடி கும்பல்தான். வெளிநாட்டு கலெக்ஸனில் சீமானுக்கா, திருமாவிற்க்கா என்பதில் நடந்த கலவரம். இவர்கள் யாரும் இலங்கை தமிழரை பிரதிநிதப் படுதுபவர்கள் இல்லை. புலிகளின் பெயரால் சுருட்டிய பணத்தை பங்கு போடுவதில் உள்ள தராறு.

Durai Ilamurugu வரலாறு தெரியும்.ஆனால் சும்மா இருக்கிறவனைக் கூப்பிட்டு ஆயுதம் தரவில்லை.தப்பித்து ஓடி வந்து தலைநகரில் தஞ்சம் புகுந்தனர் சீலங்கா தமிழர்கள்.அதன் பிறகு தான் ஆட்டம் ஆரம்பம்.இந்திராகாந்தி தொடங்கி எத்தனையோ பேர் இதில் தொடர்புடைய தலைவர்கள்

Durai Ilamurugu ஆனால் எனது கேள்விக்கு பதில் இல்லை.இன்று எல்லாம் முடிந்த பின்னர் தமிழ் நாட்டில் இருந்து வரும் தலைவர் கூட்டங்களை தடுக்க முயல வேண்டுமா?

Radha Manohar   : ஈழப்போராட்டத்தால் தமிழகம் எவ்வளவு இழந்தது என்பது பற்றி இவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை அறிவும் கிடையாது .. அல்லது தெரிந்தும் வேண்டும் என்றே நடிக்கிறார்கள் ..

Villa Anandaram :   தமிழகம் வேறு, தமிழக சந்தர்பவாத தலைவர்கள் வேறு. மேலும் இலங்கை அரசியல் தலையீட்டால் தான் இந்த இழப்புகள் இரண்டு பக்கமும். அதுவேன்டாம் என்றுதான் சொல்கிறேன். உங்கள் அரசியலுக்கு எம்மை வைத்து அரசியல் செய்யவேண்டாம். இந்த ஒரு அடிப்படை அறிவும் கிடையாது . Durai Ilamurugu உங்கள் கேள்விக்கு பதில் தந்து விட்டேன். உங்கள் அரசியலை உங்கள் கும்பலுடன் பேசுங்கள். எமது அரசியலை, பிரபாகரன் போஸ்டரை காட்டி அரசியல் செய்தால் அதை எதிர்க்க அதில் பங்கு போட உங்கள் அரசியல்வாதிகள் போன்ற ஒரு காட்டு மிராண்டி கும்ப‌லும் புலம்பெயர் தமிழரிடையே இருக்கும். உங்களுக்குள் அடிபட்டு சாவதானால் சாகட்டும். இதுதான் எனது முதல் முதல் பதிவு. அடிப்படையில் சொல்லவருவது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எமக்கு முக்கியமானவர்கள் அல்ல. இலங்கை ராணுவ ஜெனரல் சொன்னது போல திருமா உட்பட அவர்கள் வெறும் கோமாளிகள். சர்வதேசமும் அப்படிதான் அவர்களை கருதுகிறது. Like · Reply · 2h Radha Manohar Radha Manohar Villa Anandaram தமிழக அரசியல்வாதிகளை காட்டு மிராண்டிகள் என்கிறீர்கள் சிங்களவர்களை மொட்டு சிங்களவர்கள் என்கிறீர்கள் . மலையத்தவரை தோட்டக்காட்டான் என்கிறீரகள் . கிழக்கு மாகாணத்தவர்களை மட்டக்களப்பான் என்கிறீரகள் இஸ்லாமியர்களை சோனி தொப்பி திருப்பி என்றெல்லாம் கூறுகிறீர்கள் .. நல்லது . சரி இவர்கள் எல்லாவறையும் விட மேன்மக்களான யாழ் உயர்குடி உத்தமர்களே உங்கள் வரலாறு என்ன? உலகம் பார்த்துவிட்டது அதை ..

Villa Anandaram : //சிங்களவர்களை மொட்டு சிங்களவர்கள் என்கிறீர்கள் . மலையத்தவரை தோட்டக்காட்டான் என்கிறீரகள் . கிழக்கு மாகாணத்தவர்களை மட்டக்களப்பான் என்கிறீரகள் இஸ்லாமியர்களை சோனி தொப்பி திருப்பி என்றெல்லாம் கூறுகிறீர்கள்// அதுதானே கேவலம் நீங்கள் ஏனப்படி சொல்கிறீர்கள்? நான் எங்காவது சொல்லி உள்ளேனா? அப்படி சொல்வது உங்கள் திருமா கொண்டாடும் யாழ்மைய வாத வி.பு ஆதரவாளர்கள் தானே. Like · Reply · 2h Radha Manohar Radha Manohar Villa Anandaram அடியேன் கூறியது தனிப்பட்ட ரீதியில் தங்களை அல்ல .. ஆனால் தங்களின் வாதங்கள் அசல் புலியாதரவு யாழ் மையவாத வெறுப்பு கருத்தியலுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது எனவே அதை நோக்கித்தான் எனது விமர்சனம் .. தனிப்பட்ட ரீதியில் தாங்கள் ஒரு மனித நேயர் என்பது அறிவேன் . ஆனால் தங்களை அறியாமலோ என்னவோ தங்களின் வார்த்தைகள் யாழ்மையவாத வார்த்தைகளாக இருந்தன ..

 Villa Anandaram : நான் புலி ஆதரவாளன் அல்ல என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் மதிப்பிற்குரிய திருமா புலி ஆதரவாளர். அப்போ அவரும் யாழ்மையவாத அரசியலை ஆதரிக்கின்றாரா. அவருக்கு செம்பு தூக்கும் நீங்களும் யாழ்மையவாத ஆதரவாளரா? யாழ்மையவாத வேளாள மேட்டுக்குடிவாத, பிர…See More Like · Reply · 1h Radha Manohar Radha Manohar செருப்பால் அடித்து துரத்த வேண்டும் என்ற வரிகள் யாழ்மையவாத அடாவடி வார்த்தைகள்

Villa Anandaram :  யாரை, ஏமாற்ற முயல்பவரை. உண்டியல் குலுக்க வருபவரை அது யாழ்பாணியே என்றாலும். எனது வீட்டிற்கு அலேலூயா நோட்டீஸ் கொடுக்க வருபவரையும் கிடத்தட்ட அதே போன்ற செயல்லால் தன் விரட்டுகிறேன்.

 Radha Manohar தட்ஸ் ஆல் யுவர் ஆனர் 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக