nakkheeran.in - santhosh :
கர்நாடக
மாநிலத்தில்
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், கடந்த 22- ஆம் தேதி முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசு ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது.
இதை தொடர்ந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் வழங்கப்பட்டது. அதை பரிசீலித்த முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி, தற்போதைய 15- வது கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையும் வரை, அதாவது 2023- ஆம் ஆண்டு வரை தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து, பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா கடந்த 26- ஆம் தேதி கர்நாடக மாநில முதல்வராக நான்காவது முறையாக பதவியேற்றார்.
அதை தொடர்ந்து 29- ஆம் தேதி முதல்வர் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 105 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாஜக அரசு வெற்றி பெற்றது. அப்போது பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் திடீரென் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேரை கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக