தினத்தந்தி: இளம்பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 1.6 கிலோகிராம் ஆபரணங்கள் மற்றும் 90 நாணயங்களை இந்திய மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலத்தின் பீர்பாம் மாவட்டடத்தின் மர்கரம் நகரைச் சேர்ந்த 22 வயதான ரூனி கத்துன் எனும் யுவதியின் வயிற்றிலிருந்தே இப்பெருந்தொகை ஆபரணங்களும் நாணயங்களும் அகற்றப்பட்டன.
இந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், இப்பொருட்களை விழுங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் கடும் சுகயீனம் காரணமாக பீர்பாம் மாவட்டத்தின் ராம்புர்ஹாத் நகரிலுள்ள அரசாங்க வைத்தியசாலையில் கடந்த 16 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்கேன் பரிசோதனையின் போது அந்த யுவதியின் வயிற்றில் பெருந்தொகை உலோகப் பொருட்கள் இருப்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
69 சங்கிலிகள், 80 காதணிகள், 11 மூக்குத்திகள், 8 பெண்டன்கள், 5 கொலுசுகள், 90 நாணயங்கள், கடிகாரத்தின் டயல் ஒன்று ஆகியன இப்பொருட்களில் அடங்கியிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் சித்தார்த்த பிஸ்வால் இது தொடர்பாக கூறுகையில், ‘மேற்படி ஆபரணங்களில் பெரும்பாலானவை, செப்பு மற்றும் பித்தளையினால் செய்யப்பட்டவை, அத்துடன் தங்க நகைகளும் அங்கு இருந்தன’ எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக டாக்டர் சித்தார்த்த பிஸ்வால் மேலும் கூறுகையில், jewellery யுவதியின் வயிற்றிலிருந்து 1.6 kg நகைகள், நாணயங்கள் சத்திரசிகிச்சை மூலம் மீட்பு யுவதியின் வயிற்றிலிருந்து 1.6 Kg நகைகள், நாணயங்கள் சத்திரசிகிச்சை மூலம் மீட்பு jewellery‘இப்பெண் ஒவ்வொரு தடவை உணவு உட்கொண்ட பின்னரும் வாந்தியெடுத்ததால் மிகவும் பலவீனமாக காணப்பட்டார்.
அவரின் அல்புமின், ஹீமோகுளோபின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இதனால் எம்மால் உடனடியாக சத்திரசிகிச்சையை செய்ய முடியாமல் இருந்தது. அவரின் உடல் பலவீனமாக இருந்ததால் குறைந்தபட்சம் 5 போத்தல் இரத்தம் ஏற்ற வேண்டியிருந்தது.’ எனத் தெரிவித்துள்ளார்.
தமது வீட்டிலிருந்து நகைகள் அண்மைக்காலமாக காணாமல் போக ஆரம்பித்திருந்ததாக ரூனியின் தாயாhர் தெரிவித்துள்ளார்.
இந்த தங்க ஆபரணங்களை தனது மகள் விழுங்கிவந்தார் என்பதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேற்படி நாணயங்கள் ரூனியின் சகோதரரின் கடையிலிருந்து எடுக்கப்பட்டு விழுங்கப்பட்டிருக்கலாம் எனவும் ரூனியின் தாயார் மேலும் கூறியுள்ளார். தங்க நகைகள் காணாமல் போவது குறித்து ரூனியிடம் கேட்ட சந்தர்ப்பங்களில் அவர் அழ ஆரம்பித்தார் எனவும், ஆனால், அவர் நகைகளை விழுங்கியதாக ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை எனவும் ரூனியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாம் அவரின் மீது ஒரு கண் வைத்திருந்தாலும் அவர் எப்படியோ நகைகளையும் ஏனைய பொருட்களையும் எடுத்து விழுங்கியுள்ளார். கடந்த இரு மாதங்களாக அவர் சுகவீனமடைந்திருந்தார். ராம்புர்ஹாத் அரசாங்க வைத்தியசாலையில், ரூனியை அனுமதிப்பதற்கு முன்னர், பல மருத்துவர்களிடம் அவரை அழைத்துச் சென்றோம். ஆனால், பலன் எதுவும் கிடைக்கவில்லை’ எனவும் ரூனியின் தாயார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக