வெள்ளி, 12 ஜூலை, 2019

அமெரிக்க கிரீன் கார்டு வரம்பு நீக்கம் .. இந்தியர்கள் மகிழ்ச்சி

US House, country cap, Green Card, அமெரிக்கா, கிரீன் கார்டுதினமலர் : வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், நிரந்தரமாக தங்கி வேலை பார்க்க வகை செய்யும், 'கிரீன் கார்டு'க்கு தற்போதுள்ள, 7 சதவீத உச்சவரம்பை நீக்கும் மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
அமெரிக்காவில் குடியேற தவம் கிடக்கும் இந்திய கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மெத்தப் படித்தவர்களுக்கு, இந்த மசோதா நிறைவேறுவது அவசியம்.இந்தியா போன்ற நாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்பவர்கள், 'எச் 1 பி' விசாவை பெறுகின்றனர். அவர்களில் பலர் நிரந்தரமாக அங்கு குடியேற விரும்பினால் முடிவதில்லை.


காரணம், எச் 1 பிவிசா வைத்திருப்பவர்களில், தகுதியுள்ள, 7 சதவீதம் பேருக்கு தான், விண்ணப்ப தேதியின் அடிப்படையில், கிரீன் கார்டு எனப்படும், 'எச் ஆர் 1044' விசா வழங்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான இந்திய வல்லுனர்கள், 70 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த, 7 சதவீத உச்ச வரம்பை நீக்க வகை செய்யும் சட்ட மசோதா, அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இங்கு ஆளும் குடியரசு கட்சியினர் அதிகம் உள்ளனர். இதன் பின்னர் இந்த மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்து போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக