ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஜெயபால் ரெட்டி காலமானார் முன்னாள் மத்திய அமைச்சரும்...ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ...


தினமலர் : ஐதராபாத்: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 77.;கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று(ஜூலை 28) அதிகாலை அவர் காலமானார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
1942 ல் பிறந்த இவர் ஓஸ்மானியா பல்கலையில் மாணவர் தலைவராக இருந்தார். 1970 காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்திரா பிரதமராக இருந்த போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிது காலம் ஜனதா கட்சியிலும், ஜனதா தளத்திலும் இருந்துள்ளார்.

பின்னர் காங்கிரசில் இணைந்த அவர், தகவல் மற்றும் தொலை தொடர்பு, நகர்ப்புற வளர்ச்சி பெட்ரோலியத்துறை, அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் பதவிகளை வகித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டு முறை ஆட்சி அமைத்த போது, அதில் அமைச்சராக அங்கம் வகித்துள்ளார். நான்கு முறை, லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக